புள்ளியும் கோடும்
புள்ளியும் கோடும் -கணிதம் வழியாக ஒரு காதல் என்ற குறும்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். 1965ம் ஆண்டு உருவாகக்கபட்ட இப்படம் நார்டன் ஜஸ்டரின் புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எம்.ஜி. எம் நிறுவனம் தயாரித்துள்ள இக்குறும்படம் பத்து நிமிசங்கள் ஒடக்கூடியது. கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கணிதத்தை இவ்வளவு எளிமையான ஒரு காதல் கதையாக உருமாற்ற முடிந்திருப்பது பெரிதும் வியப்பளித்தது. ஒரு புள்ளியைக் காதலிக்கும் நேர்கோட்டின் கதை என்ற புனைவு ரீதியிலும் மிக …