ஆளுமை

புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக, நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது. பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி …

புகையில்லாத தீச்சுடர் Read More »

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

தமிழ் பதிப்புத்துறை வரலாற்றில் வாசகர் வட்டத்திற்குத் தனியிடம் உண்டு. அது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய பதிப்பகம். அவர் தியாகி சத்தியமூர்த்தியின் மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். உலகத் தரம் வாய்ந்த புத்தகத் தயாரிப்பினை வாசகர்வட்டம் மேற்கொண்டிருக்கிறது. கலாஸாகரம் ராஜகோபால் வரைந்த ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பு. ஒரே அட்டை ஒவியம் தான் எல்லா நூல்களுக்கும். புத்தக விலை மிகவும் குறைவு. ஆனால் தரமான இந்தப் புத்தகங்கள் விற்காமல் போய் பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி என்னிடமுள்ள வாசகர் …

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி Read More »

கிருஷ்ணையா

ரஷ்ய இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம். . நா. தர்மராஜன், ரகுநாதன் டி.எஸ்.சொக்கலிங்கம், பாஸ்கரன் ஆகியோரின் பணியும் பங்களிப்பும் மகத்தானது. அவற்றைப் படித்து உருவானவன் என்ற முறையில் அவர்கள் மீது பெருமதிப்பும் அன்பும் உண்டு. இவர்களில் நா.தர்மராஜன் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா இருவரது பெயர்கள் மட்டுமே அறிமுகம். ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களில் அவர்களைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இடம்பெற்றிருக்காது. அவர்களின் புகைப்படத்தைக் கூட நான் கண்டதில்லை. இதில் கிருஷ்ணையா, …

கிருஷ்ணையா Read More »

இசையே எனது புன்னகை

இந்தியாவின் மகத்தான இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது சொந்த ஊரான காசி பற்றியும் தனது இசை வாழ்க்கையின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட கட்டுரை. அட்சரம் இதழில் வெளியானது. •• பனாரஸில் மழைக்காலம் துவங்கியிருக்கிறது. கங்கை நதிக் கரையோரங்களில் அதிகாலை நேரம் ரம்மியமானது. படித்துறைகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. குவாலியர் ராஜா இந்தூர் அரசர் எனப் பல்வேறு ராஜாக்களும் கட்டிய படித்துறைகளில் வேகமான கங்கையின் அலைகள் மோதுகின்றன. கங்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதே இசை கேட்பது போலவேயிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகளில் …

இசையே எனது புன்னகை Read More »

காதலின் ஒளியில்

நோபல் பரிசு பெற்ற கவிஞரான ஆக்டோவியா பாஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். The Labyrinth of Octavio Paz”என்ற இந்த ஆவணப்படத்தில் அவரது ஆளுமையின் பன்மைத்தன்மை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ் இந்தியாவில் மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றியவர். டெல்லியில் வசித்த நாட்களில் பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய அரசியல் ஆலோசகரின் மனைவியான மேரி ஜோஸ் உடன் நெருக்கமான காதல் உருவானது. அந்த ரகசியக்காதல் தான் இந்தியாவை அவர் நேசிக்க ஒரு காரணம் என்கிறார்கள். பாஸ் ஏற்கனவே …

காதலின் ஒளியில் Read More »

ஏனுகுல வீராசாமி

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர். 1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி …

ஏனுகுல வீராசாமி Read More »

உஸ்தாத் இல்லம்

– கவிஞர் சுகுமாரன். காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன். அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது. சுவர்களில் …

உஸ்தாத் இல்லம் Read More »

அண்டரெண்டப் பட்சி.

நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார். தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது. இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல். பெருமரங்களின் …

அண்டரெண்டப் பட்சி. Read More »

சௌடையாவின் குரல்.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது. அதில் சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்கத் தருவார்கள். சில நேரம் கதையை ஆசிரியரே படித்துக் காட்டுவார். நாங்கள் கேட்பதுண்டு. அழவள்ளியப்பா எழுதிய ஈசாப் கதைகளின் பாடல் வடிவம் மிகவும் பிரபலமானது. ஆசிரியர் அதை அழகாகப் பாடுவார். ஒட்டுமொத்த வகுப்பறையும் அந்தப் பாடலைப் பாடும். நீதிபோதனை வகுப்பு பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மதியம் தான் இருக்கும். ஆகவே அன்று பள்ளி முடிந்தபிறகும் மாணவர்கள் மைதானத்திலிருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்போம்.தப்பியோடிய …

சௌடையாவின் குரல். Read More »

மாஸ்கோ நினைவுகள்

கல்வியாளர். நெ.து.சுந்தர வடிவேலு இரண்டு முறை சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைச் சோவியத் மக்களோடு, நான் கண்ட சோவியத் ஒன்றியம் என இரண்டு பயண நூல்களாக எழுதியிருக்கிறார். இரண்டும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சோவியத் ஒன்றியம் பற்றியோ அதன் வாழ்க்கை முறை குறித்தோ அதிகம் தெரியாது. அவர்கள் இந்த நூலை வாசித்தால் நிச்சயம் வியந்து போவார்கள். இந்தியாவிலிருந்து சோவியத் சென்று வந்த எழுத்தாளர்கள் பலரும் தனது பயண அனுபவத்தை நூலாக்கியிருக்கிறார்கள். …

மாஸ்கோ நினைவுகள் Read More »