நெட் கெல்லி
நெட் கெல்லியை ஆஸ்திரேலியாவின் கட்டபொம்மன் என்று சொல்லலாம். வெள்ளை அதிகாரத்திற்கு எதிராகப் போராடி பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அவரை ஆஸ்திரேலியா மக்கள் போராளியாகக் கொண்டாடுகிறார்கள். நெட் கெல்லி (Ned Kelly) அடைத்து வைக்கபட்ட மெல்போர்னில் உள்ள நூற்றாண்டுப் பழமையான ஹால் (Gaol) எனும் சிறைச்சாலையை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது பார்த்தேன். இருண்ட சிறைச்சாலை என்பதால் ஜெயில் என்பதற்கு பதிலாக ஹால் என்று குறிப்பிடுகிறது. இது குகை என்று பொருள்படும் லத்தீன் மொழியின் கொச்சை சொல்லாகும்.மெல்போர்ன் …