காந்தியோடு பேசுவேன் காணொளி
எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதையை வித்யா சுபாஷ் வெகு சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இலக்கிய வாசகர். காந்தியின் குரல். வார்தா காட்சிகள், எனது காந்தி குறித்த உரையின் பகுதி என்று அழகாக இணைத்து இந்தக் கதையைச் சொல்லிய விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒரு கதையைச் சொல்வதற்கு வித்யா சுபாஷ் காட்டியுள்ள அக்கறையும் உழைப்பும் நல்ல முன்னுதாரணம் என்பேன். அவரது கதைகேளு கதைகேளு நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் சிறுகதைகளைத் தொடர்ந்து அறிமுகம் …