மலேசியாவில் வசிக்கும் தமிழறிஞரான டாக்டர் எஸ் ஜெயபாரதியின் எழுத்துகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன், பழந்தமிழ் இலக்கியம். ஆன்மீகம். விஞ்ஞானம், ஜோதிடம், தமிழ்பண்பாடு, நுண்கலை. வரலாற்று ஆய்வுகள் என்று பரந்த தளங்களில் சிறப்பாக எழுதிவருபவர், அவரது மலேசிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் அற்புதமானவை, அவரது எழுத்து தேர்ந்த நகைச்சுவையும் செழுமையான மொழிநடையும் கொண்டது,
டாக்டர் ஜெயபாரதி தேர்ந்த படிப்பாளி, அவரது எழுத்தில், வியக்க வைக்கும் தகவல்கள். நுட்பமான விபரங்கள். நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
அவரது இணையதளத்தை அடிக்கடி பார்வையிட்டு வாசித்து வருகிறேன், அவரோடு நேர் பரிச்சயம் கிடையாது என்றாலும் நீண்ட காலம் பழகிய நண்பரைப் போல தனது எழுத்துகளின் வழியே நெருக்கமாகிவிட்டார், ஜெயபாரதியின் நகைச்சுவை உணர்வு அபாரமானது, அசோகமித்ரன், அ,முத்துலிங்கம் கதைகளில் இதன் சாடைகளைக் காணமுடியும்.
மலேசியத் தமிழறிஞரான ஜெயபாரதி அகத்தியர் மடற்குழுவின் நடத்துனராகவும் செயல்பட்டு வருகிறார் என்று அறிகிறேன்
அவரது இணைய தள முகவரி