கவிதை

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஜெல்லி மீனே ஜெல்லி மீனே – தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – jellyfish ஜெல்லி மீனே …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3 Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து  மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஒரு இடையன் – தேவதச்சன்  (ஆங்கிலம்: நகுல்வசன்) – goat-herd ** ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2 Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1

பதாகை இணைய இதழில் நகுல்வசன் தேவதச்சனின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பதுடன் மொழிபெயர்ப்பின் சவால்களையும் தான் கவிதைகளை புரிந்து கொண்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். கவிதையை மொழியாக்கம் செய்வதன் சவால் குறித்து இது போல அசலாக எழுதப்பட்ட குறிப்புகள் குறைவே. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து இந்த மொழியாக்கம் மீள்பதிவு செய்யப்படுகிறது •• குருட்டு ஈ / …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1 Read More »

மெலோவின் கவிதைகள்

ஒரு படைப்பாளியாக எனக்கு கவிதைகளின் வழியே தான் அதிகத் தூண்டுதல் கிடைக்கிறது. நான் கவிதைகளைக் கொண்டாடுகிறவன் . சமகால உலகக் கவிதை நூல்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தமிழின் நவீன கவிதை மீதும் தனித்த ஈடுபாடு உண்டு. கடந்த வாரம் ஜோசோ கப்ரால் டி மெலோ நெட்டோ,( João Cabral de Melo Neto) என்ற ஒரு பிரேசிலிய கவிஞரின் Education by Stone என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்தேன். இது அவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்வு …

மெலோவின் கவிதைகள் Read More »

ரகசியத்தின் தோட்டம்.

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவென்பேன்.. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். மூன்று நாட்களாகக் கையில் வைத்து வைத்துப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். அற்புதம், அற்புதம் என மனம் அரற்றிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கவிஞனாக ஷங்கர் ராம சுப்ரமணியன் தனது கவித்துவ உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.. பாஷோவின், ழாக் …

ரகசியத்தின் தோட்டம். Read More »

கொரியக் கவிதை

நாம் ஏன் புத்தனைத் தனியே விடக் கூடாது? புத்தனை ஒரு யானைச் சவாரி செய்ய வைக்கிறோம், ஒரு கிராமச் சிறுவன் ஒரு மனிதனின் தோளில் சவாரி செய்வது போல, மற்றும் நாம் புத்தனை ஓடவும் விளையாடவும் விடுகிறோம், பிறகு அவரை அழச் செய்கிறோம், மற்றும் நாம் அவரை ஒரு தயிர்க்காரப் பெண்ணுடன் ஆனந்தத்துடன் இணைய விடுகிறோம் மற்றும் அதைத் தந்திரா என்று அழைக்கிறோம், ஆனால் பிறகு நாம் அவரை வெறுமைக்குள் தானாக புன்னகை செய்யவிடுகிறோம், உட்காரச் செய்கிறோம், …

கொரியக் கவிதை Read More »

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்

(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின்  கட்டுரை ) ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. …

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள் Read More »

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ

சியோ ஜியோங்-ஜூ கொரியாவின் முக்கிய கவிஞர். (Seo Jeong-ju) ஐந்து முறை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர், மிதாங் என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். பதினைந்து கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. கொரிய நவீன கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். கவிதைகள் குறித்து சிறப்பாக உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவரது Poems of a Wanderer தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான கவிதைகள். தமிழில் இவரது கவிதைகள் ஏதும் வெளியாகியுள்ளதாக தெரியவில்லை.  சங்க தமிழ் கவிதையின் சாயலை இவரிடம் காணமுடிகிறது. குறிப்பாக இயற்கையின் …

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ Read More »

கவிதை காணுங்கள்

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களின் வாழ்க்கை மற்றும் கவிதைகள் குறித்த ஆவணப்படங்கள் கவிஞர் ரூமியின் வாழ்வு மற்றும் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள Rumi documentary – English https://youtu.be/4H5UxOANuR8 நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து Pablo Neruda: “The Greatest Poet of the 20th Century In Any Language https://youtu.be/mtkG2gyFblg உலகப்புகழ்பெற்ற கவிஞர் யஹுதா அமிக்காய் குறித்து A Celebration of Yehuda Amichai https://youtu.be/OIf9EPXNfSU போலந்துக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் …

கவிதை காணுங்கள் Read More »

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்

பாரசீகக் கவிஞரான ரூமியின் கவிதைகள் தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. இப்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் விற்பனைசெய்கிறார்கள். இது சமீபத்தில் படித்த மிக முக்கியமான கவிதைத்தொகுப்பாகும். ரூமியின் சில கவிதைகள் தமிழில் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் ஒரே தொகுப்பாக, அதுவும் மிக நேர்த்தியாக, ஒவியங்களுடன் துணைக்குறிப்புகளுடன் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை. அவ்வகையில் இதைச் சாத்தியமாக்கிய என். சத்யமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.. கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த (THE …

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள் Read More »