கோபத்தின் எடை
புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28. நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள். பேருந்து …