கரையும் உருவங்கள்
‘The Last Music Store’. என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். மேகா ராமசாமி இயக்கியுள்ளார் மும்பையின் புகழ்பெற்ற மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் பற்றிய இந்த ஆவணப்படம் அதன் கடந்தகாலத்தையும் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களையும் பற்றியது. ரிதம் ஹவுஸ் பற்றிய ஆவணப்படத்தைக் காணும் போது என் மனதில் லேண்ட்மார்க் புத்தகக்கடை மூடப்பட்ட கடைசிநாளில் அங்கே சென்று புத்தகங்கள் வாங்கியது தோன்றி மறைந்தது ரிதம் என்ற பெயர் கடைக்கு வைக்கப்பட்டதற்கான காரணம், அந்தக் கடைக்கு வருகை தந்த புகழ்பெற்ற …