இசை

ஆக்காட்டி ஆக்காட்டி

சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்காக படமாக்கபட்ட ஆக்காட்டி ஆக்காட்டி என்ற இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை, இப்பாடல் நாட்டுபுறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது, வலையென்ன பெரும் கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா என நம்பிக்கையூட்டும் விதமாக இதை மாற்றி எழுதியவர் தோழர் எஸ்ஏபெருமாள், பாடலை மேடைகளில் பாடி புகழ்பெறச் செய்தவர் டாக்டர் கே. ஏ.குணசேகரன் படத்திற்காக இந்தப் பாடலை நாடக இயக்குனர் பிரளயன் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், பாடலும் படமாக்கபட்ட விதமும் அற்புதமாக உள்ளது இதை …

ஆக்காட்டி ஆக்காட்டி Read More »

டி.எம்.கிருஷ்ணா

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் உரையைக் கேட்பதற்காக நேற்று மாலை நடைபெற்ற கேணி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன், நான் அதிகம்  இசைகேட்கிறவனில்லை, ஆனால் கிருஷ்ணா பாடிய சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன், தனித்துவமான குரல் அவருடையது,  கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இருவரது கச்சேரியை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட மார்கழி ராகம் என்ற திரைப்படம்  எனக்குப் பிடித்திருந்தது, நேற்று அவர் கர்நாடக இசையை அறிமுகப்படுத்திப் பேசியதும் அதைத் தொடர்ந்த விவாதங்களுக்குப் பதில் அளித்ததும் மிகச்சிறப்பாக இருந்தது, இசை தொடர்பான அவரது ஆழ்ந்து தெளித்த …

டி.எம்.கிருஷ்ணா Read More »

காருகுறிச்சியார்.

              சில நாட்களுக்கு முன்பாக நாதஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலத்தின்  சொந்த ஊரான காருகுறிச்சிக்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் கையில் நாதஸ்வரத்துடன் உள்ள காருகுறிச்சியார் சிலை காணப்படுகிறது. சிலை செய்தவருக்கு காருகுறிச்சியார் மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாதஸ்வரம் வளைந்து நெளிந்து போயிருக்கிறது. காருகுறிச்சியின் பூர்வீக வீடு விற்கபட்டு தற்போது யாரோ குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்த பெண்மணி அடிக்கடி …

காருகுறிச்சியார். Read More »