நீரும் நிலமும்
Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது. எங்கே போனது …