இயற்கை

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர …

மாயவெளிச்சம் Read More »

பசுமை உணவகம்

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க  (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான …

பசுமை உணவகம் Read More »

லூரே கேவன்ஸ்

இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள் நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம், பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது  இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் …

லூரே கேவன்ஸ் Read More »

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி …

தண்ணீரின் சிறகுகள் Read More »

சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன், நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து …

சமண நடை Read More »

உயிர்கொல்லி

சனிக்கிழமை கோவையில் நடைபெற்ற என்டோசல்பான் உள்ளிட்ட உயிர்கொல்லிகளுக்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டேன், இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராஜன். எழுத்தாளர் நாஞ்சில்நாடன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டார்கள், இயல்வாகை என்ற சூழலியல் அமைப்பு இந்த உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பயணத்தை நடத்துகிறது, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளைஞர்கள், உணர்ச்சிமயமாக அவர்கள் சூழலியல் சார்ந்து பேசுவதும் தீவிரமாகச் செயல்படுவதையும் காணும் போது உத்வேகமாக இருந்தது, இந்த நிகழ்வின் …

உயிர்கொல்லி Read More »

ஷேக்ஸ்பியரின் பறவைகள்

ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள். Blackbird, Bunting, Buzzard, Chough, Cock, Cormorant, Crow, Cuckoo, Dive-dapper, Dove and Pigeon, Duck, Eagle, Estridge, Eyas-musket, Guinea-hen, Handsaw Falcon and Sparrowhawk, Finch, Goose, Hedge Sparrow, House Martin, Jackdaw, Jay, Kite, Lapwing, Lark, Loon, Magpie, Nightingale, Osprey, Ostrich, Owl, Parrot, Partridge, Peacock, Pelican, Pheasant, Quail, Raven, Robin, …

ஷேக்ஸ்பியரின் பறவைகள் Read More »

மரங்கள்

நேற்று மரங்கள் என்ற 16 பக்கமுள்ள சிறுவெளியீடு ஒன்றினை ஒசூர் நண்பர் பாலசுந்தரம் அனுப்பியிருந்தார். இரவில் வாசித்தேன்.  மரங்களை முதன்மை படுத்திய அழகான சிறுதொகுப்பு . மிக  நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது. இது போன்ற வெளியீடுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டாமல் போயிருந்தால் தவறவிட்டிருப்பேன். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் மரங்கள் பற்றிய உரைநடைக் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருப்பவர் கதிரவன். இத்தொகுப்பு மரங்களைப் பற்றி கல்யாண்ஜி. தேவதச்சன் இருவரது ஒரு கவிதையும் உள்ளடக்கியதாக …

மரங்கள் Read More »

பார்க்க வந்த இலை

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு. அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. …

பார்க்க வந்த இலை Read More »