மழை இருட்டு
முந்தாநாள் மாலை நான்கு மணியிருக்கும். பாலாவின் அவன்இவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். வெளியே பாருங்கள். அதற்குள் இருட்டிவிட்டது என்ற குரல் கேட்டது. அறையை விட்டு வெளியே வந்து நின்று பார்த்தேன். சுற்றிலுமிருந்த மரங்கள் தெரியவில்லை. சட்டென பகல் மறைந்து எங்கும் இருண்டிருந்தது. இது அன்றாடம் காணும் இருளில்லை. சிம்னியை கரிப்புகை மறைத்து கொண்டிருப்பது போல பகல்வெளிச்சத்தை இந்த இருள் மூடிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றியது. மாலை நான்கு மணிக்கு இப்பிடி இருண்டு போவது அபூர்வம். ஆகாசத்தையே பார்த்துக் …