வரலாறு

கனவினைப்பின் தொடர்ந்து

கனவினைப்பின் தொடர்ந்து என்ற குழந்தைகளுக்கான சரித்திர நூலை வாசித்தேன். த.வெ.பத்மா எழுதிய The Forbidden Temple: Stories from the Past நூலை எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர் வெளியீடாக வெளியாகியுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் த.வெ.பத்மா கணிதம் மற்றும் வரலாறு சார்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது MATHEMATWIST: number tales from around the world கணிதம் குறித்த சுவாரஸ்யமான கதைகளின் தொகைநூலாகும். கற்காலத்தில் குழந்தைகள் …

கனவினைப்பின் தொடர்ந்து Read More »

நூறு பொருள்களில் உலக வரலாறு

மனிதகுல வரலாறு குறித்துத் தோழர் எஸ்ஏ பெருமாள் வகுப்பு எடுப்பதில் விற்பன்னர், அவரது உரையில் கற்காலம் துவங்கி இன்றைய இணையம் வரையான மனிதகுல வளர்ச்சி மற்றும் அறிவியலின் வரலாறு. தொழில்நுட்பம் உருவானவிதம், கண்டுபிடிப்புகளின் வரலாறு எனச் சுவைபடக் கூறுவார், முதன்முதலாக ஜார்ஜ் தாம்சனின் மனிதகுல சாரம் நூலைப்பற்றி அவரது உரையில் தான் அறிந்து கொண்டேன். ஜார்ஜ் தாம்சன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிய ஆய்வாளர், கிரேக்க மொழியில் தேர்ந்தவர், பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்துத் …

நூறு பொருள்களில் உலக வரலாறு Read More »

தோக்கியோ சுவடுகள் 5

புல்லட் ரயில் ஹிரோஷிமா நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனம் காலத்தின் பின்னே போய் ஜப்பானின் வரலாற்று நிகழ்வுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது, ஆகாயத்தில் ஒரு குடைக்காளான் மிதப்பது போன்ற அணுகுண்டு வீச்சின் புகைப்படத்தை எனது பள்ளி நாட்களில் முதன்முறையாகப் பார்த்தேன், அறிவியல் பரிசோதனைக்கூடத்தில் ஒரு போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் போது அமெரிக்கா, ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசி ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொன்று குவித்தது என்று ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார், ஆனால் ஏன் ஹிரோஷிமாவில் …

தோக்கியோ சுவடுகள் 5 Read More »

கழுமரம்

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the …

கழுமரம் Read More »