admin

சோபியாவின் இரண்டு கதைகள்

 “The Kreutzer Sonata” என்ற டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைக்கு எதிராக டால்ஸ்டாயின் மனைவி சோபியா ஒரு கதையை எழுதியிருக்கிறார். Whose Fault எனப்படும் அக்கதை போஸ்னிஷேவ்வால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட மனைவியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாயின் கதையில் வரும் பெண் தனது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்று கோபம் கொண்ட சோபியா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். உண்மையில் அந்தக் கதையில் வருவது போல செர்ஜி தனியேவ்,என்ற இசைக்கலைஞருடன் சோபியாவிற்கு நெருக்கம் இருந்தது அதை ரகசியக்காதலாக டால்ஸ்டாய் கருதியே இக்கதையை …

சோபியாவின் இரண்டு கதைகள் Read More »

பிகாசோவின் சாகசங்கள்

The Adventures of Picasso என்ற ஸ்வீடிஷ் சர்ரியலிஸ்ட் திரைப்படத்தைப் பார்த்தேன். டேஜ் டேனியல்சன் இயக்கியது . இந்தப் படத்திற்கு a lunatic comedy என்று துணை தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள். பிகாசோவின் வாழ்க்கை வரலாற்றை நகைச்சுவையான நிகழ்வுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். கனவுத்தன்மை மிக்கக் காட்சிகளே படத்தின் தனிச்சிறப்பு. ஓவியரின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்பதால் காட்சிப்படிமங்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்பெயினில் பிகாசோவின் பிறப்பிலிருந்து படம் துவங்குகிறது. அவரது தந்தை மகன் பிறந்துள்ள சந்தோஷச்செய்தியைக் கூற வருவதும் அதைக் குடும்பம் …

பிகாசோவின் சாகசங்கள் Read More »

பார்வையாளர்கள் இல்லாத நாடகம்

லாக்டவுன் காரணமாக லண்டனின் நாடக அரங்குகள் செயல்படாத சென்ற ஆண்டில் பார்வையாளர்கள் இல்லாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படி நிகழ்த்தப்பட்ட ஆன்டன் செகாவின் Uncle Vanya நாடகத்தை முழுமையாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்த்தேன் இந்த நாடகம் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. திரைப்படத்தை விடவும் மேடைநாடகத்தை அப்படியே பதிவு செய்துள்ளது சிறப்பாக இருக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் மேட்ச் போல இதுவும் நடந்தேறியிருக்கிறது. தேர்ந்த நடிகர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட …

பார்வையாளர்கள் இல்லாத நாடகம் Read More »

ராஜபாளையத்தில்

கடந்த வாரம் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். நண்பர் பொன்னுச்சாமி மாலையில் சிறிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில் வாசிப்பு. பயணம், வரலாறு என நிறைய கேள்விகேட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் அவர்களையும் சுதந்திர சிந்தனையை சார்ந்த நரேந்திரகுமார் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சி தந்தது. திருமண நிகழ்வு முடிந்தவுடன் ராஜபாளையத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி புக் ஷாப் நடத்தும் …

ராஜபாளையத்தில் Read More »

மெய்ம்மைத்தேடிகள்

யாமம் நாவல் வாசிப்பனுபவம் அரவின் குமார் – மலேசியா யாமம் நாவலின் வாசிப்பனுபம் நினைவில் இருக்கும் இரவின் மணங்களைக் கொண்டு வரச் செய்தது. மழை பெய்த நாளிரவின்  மணம், வெக்கையான இரவின் மணம், இறப்பு வீட்டு இரவின் மணம் எனப் பலவகையான இரவின் மணம் நினைவிலெழுந்தது. இரவின் மணமென்பது காண்போரின் மனத்துக்கேற்ப மணத்தை அணிந்து கொள்கிறது. அப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மணத்தை அளிக்கும் இரவின் முடிவற்ற மணத்தை அணிந்து கொள்கிற மனிதர்களின் கதையாகவே யாமம் நாவல் அமைந்திருந்தது. …

மெய்ம்மைத்தேடிகள் Read More »

நாற்பது ஆண்டுக்கால கேள்வி

வாழும் காலத்தில் சொந்த தேசத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நாவலாசிரியன் தனது மறைவிற்குப் பிறகு உலகின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அவரது நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாவது புரிந்து கொள்ளமுடியாத புதிராகும் நல்ல நாவல்கள் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொள்கின்றன. யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர் வாசகர், அந்த நாவலைக் கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அப்படித் தான் சண்டோர் மராயிற்கும் நடந்தது ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் சண்டோர் மராய். (Sándor Márai)அவர் மறைந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் …

நாற்பது ஆண்டுக்கால கேள்வி Read More »

துப்பாக்கி முனையில் ஒரு பயணம்

இரண்டாம் உலகப்போரின் போது மலேயா மீது ஜப்பானியர் படையெடுத்த சமயத்தில் நடந்த உண்மை நிகழ்வினைப் பற்றிய படம் A Town Like Alice. நெவில் ஷட்டின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். மலேசியாவில் வசித்த வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1942 இல் ஒரு நாள் ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேறும்படியான சூழல் உருவாகிறது. சிங்கப்பூருக்குத் தப்பிப் போக முயல்கிறார்கள். கோலாலம்பூரில், ஜீன் பேஜெட் என்ற இளம்பெண் வேலை செய்த அலுவலகம் மூடப்படுகிறது. அவளது உயரதிகாரி ஹாலந்து உடனடியாக ஊரைவிட்டு வெளியேறும்படி …

துப்பாக்கி முனையில் ஒரு பயணம் Read More »

யானையின் சித்திரம்.

ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார். இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது …

யானையின் சித்திரம். Read More »

நாயனக்காரர்களின் வருகை

சஞ்சாரம் நாவல் குறித்த பார்வை மதன்குமார் நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் இதில் வரும் கலைஞர்களும் இசையும் காலமும் சஞ்சாரம் செய்வதுடன் நம்மையும் அதனுடனே கொண்டு செல்கிறது. இன்றளவும் மங்கள இசை என்றாலும் எந்த வித கோவில் திருவிழா, திருமணம், முக்கிய நிகழ்வுகள் எதுவென்றாலும் முதலில் ஞாபகம் வருவது நாதஸ்வர இசைதான். ஆனால் நாயனக்காரர்களைக் கலைஞர்களாகவோ நாதஸ்வரத்தை இசையாகவோ இப்போதெல்லாம் கருதுவதேயில்லை என்பதே வருத்ததிற்குரிய உண்மை. இதை மையமாகக் கொண்டு தான் நாவல் சஞ்சாரமாகிறது. நாயனக்காரர்களின் இன்ப துன்பங்கள் …

நாயனக்காரர்களின் வருகை Read More »

மலையாளத்தில்

பஷீரின் திருடன் என்ற எனது குறுங்கதையை ஷாஜி மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Truecopythink இணைய இதழில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. நன்றி ஷாஜி. https://webzine.truecopy.media/packet-41