டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள்.
எழுத்தாளர்களில் பலருக்கும் எழுதுவதற்கு இணையாக பல்வேறு தனித் திறன்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஒவியத்தில் நாட்டமும் தனித்திறனும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழில் நான் அறிந்தவரை எழுத்தாளர் வண்ணதாசன், விட்டல்ராவ், கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த், வைத்தீஸ்வரன், போன்றவர்கள் சிறப்பாக ஒவியம் வரையக்கூடியவர்கள். ஆனால் அதை முழுமையாக அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யூமா வாசுகி ஒவியக்கலைப் பயின்றவர். தேர்ந்த ஒவியர். அவரது எழுத்திலும் அதே தீவிரமும் தனித்துவமும் உள்ளது. கவிஞர் பிரம்மராஜன் …