அறிந்த அவசரம்
நம் நூற்றாண்டின் தீர்க்கமுடியாத நோய்களில் ஒன்று அவசரம். வீடு, பணியிடம் பேருந்து, மின்சாரரயில், வணிகவளாகம் பள்ளி, கோவில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர் என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை நாமே கேட்டுக் கொண்டதில்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிசம் கைகால்கள் தானே உதற துவங்கிவிடுகின்றன. முகம் சிவந்துவிடுகிறது. …