admin

இரண்டு குறுங்கதைகள்

மஞ்சள் கொக்கு பல மாதங்களாக வேலையற்றுப்போனதால் சகாதேவன் மிகுந்த மனச்சோர்வு கொண்டிருந்தான். நண்பர்களும் உறவும் கசந்து போயிருந்தார்கள். வெளிஉலகின் இரைச்சலும் பரபரப்பும் அவனைத்; தொந்தரவு செய்தது. சாப்பிடுவதற்கு கூட அவன் தயக்கம் கொள்ளத்; துவங்கினான். உலகின் மீது தீராத வன்மமும் ஆத்திரமும் மட்டுமே அவனுக்குள் இருந்தது. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்கதவை சாத்திக் கொண்டு செய்வதறியாமல் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து விளையாட்டாக உரசி உரசி போட்டபடியே இருந்தான். அது ஒன்று தான் அவனது ஒரே பொழுது …

இரண்டு குறுங்கதைகள் Read More »

திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக …

திரையில் ஒடிய ரயில் Read More »

ஊரும் வெயிலும்

தேசிய நெடுஞ்சாலையை விஸ்தாரணப்படுத்து பணி சாலையோரம் உள்ள கிராமங்கள், நகரங்களின் தினசரி வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இந்த முறை நேரில் கண்டேன். என்ஹெச் 7 எனப்படும் கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை அகலப்பாதையாக விரிவுபடுத்தபட்டிருக்கிறது. நேற்றுவரை ஒடுங்கி இருந்த சாலையோரக் கிராமங்கள் இன்று சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டுள்ளன. மறுபக்கம் சாலையோரம் இருந்த வீடுகள், கிணறுகள். தோட்டங்கள் யாவும் காலி செய்யப்பட்டு அவசர அவசரமாக வணிக மையங்களுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.சாலை மாற்றம் என் ஊரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆறேழு …

ஊரும் வெயிலும் Read More »

நாயர் சான்

எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார் நான் உடனே நாயர் சானின் வாழ்க்கையைப் படமாக்கலாமே என்றேன். அவர் திகைத்தபடியே யார் நாயர் சான் என்று கேட்டார்.   அவர் ஒரு மலையாளி. சுதந்திரப் போராட்ட வீரர் கேள்விபட்டதில்லையா என்றேன். தான் அப்படியொரு பேரைக்கூட கேட்டதில்லை என்றார்.நாயர் சான் மட்டுமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக …

நாயர் சான் Read More »

இலக்கிய வேதாளம்

எழுதத் துவங்கிய நாள் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நானே நிறையக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது. சில வருடங்களின் முன்பாக திண்டுக்கல்லில் உள்ள தன்னார்வ அமைப்பு லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து பேசுவதற்காக ஒரு முறை என்னை அழைத்திருந்தார்கள்.ஒரு வார …

இலக்கிய வேதாளம் Read More »

கொலையும் செய்வான் சாப்ளின்

நாடோடியாக, கோமாளியாக, சர்வாதிகாரியாக, வேலைக்காரனாக, தங்கம் தேடிச்செல்பவனாக, குத்துசண்டை வீரனாக என எவ்வளவோ கோமாளித்தனமான வேஷங்கள் புனைந்த சார்லி சாப்ளின் ஒரேயொரு படத்தில் கொலைகாரனாக நடித்திருக்கிறார். அப்படம் Monsieur Verdoux பணக்கார விதவைகள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று காதலித்து திருமணம் செய்து பிறகு சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களைக் கொலை செய்துவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பி வாழும் ஹென்றி வெர்டாக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சாப்ளின் நடித்திருக்கிறார் நம்ப முடியாமல் இருக்கிறதா? சாப்ளின் தோற்றம் நமக்குள் உருவாக்கியிருந்த பிம்பம் …

கொலையும் செய்வான் சாப்ளின் Read More »

கேள்வியரங்கம்

எனது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு அனுப்பப்பட்ட தனி மின்னஞ்சலில் இருந்த சில கேள்விகளும் சந்தேகங்களும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற காரணத்தால் அவற்றை மட்டும் தனித்து பதில் சொல்ல விரும்புகிறேன் பிறமொழி இலக்கியம் ஹைதராபாத்திலிருந்து சிவா இக்கேள்வியை அனுப்பியுள்ளார்: தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களில் எவை முக்கியமானவை. புதிய வாசகர்களுக்கு நீங்கள் எதைச் சிபாரிசு செய்வீர்கள். அவை எங்கே கிடைக்கின்றன ? எஸ்ரா : …

கேள்வியரங்கம் Read More »

பழகிய பாரதி

பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர …

பழகிய பாரதி Read More »

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.

பள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன  நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே. ஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் …

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை. Read More »

சுஜாதாவிற்கான அஞ்சலி.

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது. கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு …

சுஜாதாவிற்கான அஞ்சலி. Read More »