குல்சாரின் நினைவுகள்
1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது. பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி …