உலகம் ததும்பும் ஒசை
நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை, பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் …