கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்
பாரசீகக் கவிஞரான ரூமியின் கவிதைகள் தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. இப்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் விற்பனைசெய்கிறார்கள். இது சமீபத்தில் படித்த மிக முக்கியமான கவிதைத்தொகுப்பாகும். ரூமியின் சில கவிதைகள் தமிழில் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் ஒரே தொகுப்பாக, அதுவும் மிக நேர்த்தியாக, ஒவியங்களுடன் துணைக்குறிப்புகளுடன் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை. அவ்வகையில் இதைச் சாத்தியமாக்கிய என். சத்யமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.. கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த (THE …