எழுத்தாளரும் சமூக விமர்சகருமான நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு ,அவரது எழுத்துச் செயல்பாடுகளை முடக்குவதற்காக கொலை மிரட்டல் விடுக்கும் மதவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்
சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்து நண்பர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்த மிரட்டல்களை மதவாத அமைப்புகள் விடுத்துவருகின்றன, இது போன்ற கீழ்தரமான அவதூறுகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பொறுப்பற்ற இந்தத் தாக்குதலால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு மனஉறுதி தரும்படியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கருத்துரிமையைப் பாதுகாக்க துணைநிற்க வேண்டும்,
மனுஷ்யபுத்திரன் மீது நடைபெற்ற இந்தக் கொடூர த் தாக்குதல் எழுத்தாளரின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வன்முறையாகும், இத் தாக்குதலை கண்டித்து அனைவரும் தங்களின் உரத்த கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
•••