யாதும் ஊரே

சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குச் சிறப்பான இசை வடிவம் தந்துள்ளார் இசைக்கலைஞர் ராஜன் சோமசுந்தரம்.

அமெரிக்காவில் வசிக்கும் இவர் இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

சங்க இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல்களை மிகச்சிறப்பான இசையமைப்பில் பல்வேறு தேசங்களைச் சார்ந்த இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு உருவாக்கியுள்ளார்.

இது ஒரு அரிய சாதனை.

நண்பர் ராஜன் சோமசுந்தரத்திற்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

யாதும் ஊரே… யாவரும் கேளிர்’ என்ற, புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து மகத்தான இசையை உருவாக்கியுள்ளார் ராஜன் சோமசுந்தரம்.

பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரல் நம்மை மயக்குகிறது. கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, இத்தாலியப் பாடகி, சார்லட் கார்டினாலே, லண்டனின் ராப் இசைப் பாடகர் தர்ட்டின் பீட்ஸ் ஆகியோரின் குரல்கள் ஒன்றிணைந்து பாடலை புதியதொரு அனுபவமாக உருமாற்றுகின்றன

ராஜன் சோமசுந்தரத்தின் யாதும் ஊரே பாடல் சிகாகோவில் நடைபெறவுள்ள பத்தாவது உலகத்தமிழ் மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டின் Theme Song ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் பண்பாட்டு அடையாளமாக இப்பாடலை முன்னெடுப்பது போற்றுதலுக்குரியது.

இப்பாடலை
https://youtu.be/NtHYz6FuiAc என்ற, இணைப்பில் கேட்டு மகிழலாம்.

••••

0Shares
0