டிஸ்கவரி புக் பேலஸ் எனது நான்கு நூல்களை வெளியிட்டுள்ளது.



சிறார்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம், மீசையில்லாத ஆப்பிள் ஆகிய புத்தகங்களும், இன்றில்லை எனினும் என்ற கட்டுரைத் தொகுப்பும், ஆதலினால் நூலின் மறுபதிப்பும் வெளியாகியுள்ளன.
இந்த நூல்களை எழுத்தாளர் அசோகமித்ரன் அவர்களைச் சந்தித்து நேரில் கொடுத்தேன். என்னோடு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் வந்திருந்தார்.
இலக்கியக்கூட்டங்களுக்கு நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் வருவது ஆச்சரியமாக இருக்கிறது என அசோகமித்ரன் பேசத் துவங்கினார்.
ஆன்டன் செகாவ்வைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை. அம்ஷன் குமார் எடுத்த ஆவணப்படங்கள், புலிக்கலைஞன் கதையை ஜெர்மன் தொலைக்காட்சி படமாக்கியது, ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் சோமசுந்தரம் பற்றி எனக் கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தி ஹிந்து நாளிதழில் வெளிவரும் அவரது கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன எனப் பாராட்டிய போது அப்படியா என வியப்போடு கேட்டார். அவரது நேர்காணல்களைத் தொகுத்து தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்களா எனக்கேட்டேன். நேர்காணல்களில் அப்படி ஒன்றும் முக்கியமாகச் சொல்லிவிடவில்லை எனச்சொல்லி சிரித்தார்.
அசோகமித்ரன் தலைமையில் இந்த நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும்.
புத்தகங்களை வாங்க :