எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்தார். அவருக்கு என் அஞ்சலி. நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த தனித்துவமும் கலைநுட்பமும் கூடிய எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவர் நடத்திய முன்றில் , இலக்கியச் சிற்றிதழ்களில் தனித்துவமானது. அதில் இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 90களில் முன்றில் நடத்திய மூன்றுநாள் இலக்கியக் கருத்தரங்கு மறக்கமுடியாதது. மா. அரங்கநாதனின் புதல்வர் நீதியரசர் மகாதேவன் கவிஞர் பிரமிளுடன் நெருக்கமாக இருந்தவர். பிரமிளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆகவே ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் புத்தகக் கடைக்குத் தினமும் மாலையில் பிரமிள் வருவது வழக்கம். அவரைச்சந்திப்பதற்காகவே நண்பர்கள் முன்றிலுக்கு வருவார்கள். மா. அரங்கநாதன் மரபிலக்கியமும் நவீன இலக்கியமும் ஆழ்ந்து கற்றவர். சைவ சித்தாந்தம் குறித்து விரிவாகப் பேசக்கூடியவர். ஊர் சுற்றியாகத் திரியும் என்னைப் போன்றவர்களுக்காகத் தனது வீட்டிலிருந்து உணவு தயாரித்துக் கொண்டுவந்து தருவார் மா. அரங்கநாதன். தந்தையைப் போலவே மகாதேவனும் இலக்கியவாதிகள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். பேரன்பு காட்டிய மா.அரங்கநாதன் இன்றில்லை. அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.
![]()
Categories
- THE DOLL SHOW (7)
- Translation (2)
- அறிவிப்பு (1,874)
- அனுபவம் (135)
- அன்றாடம் (3)
- ஆளுமை (81)
- இசை (23)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (34)
- இலக்கியம் (713)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (39)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (45)
- ஓவியங்கள் (52)
- கட்டுரைகள் (7)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (1)
- கல்வி (16)
- கவிஞனும் கவிதையும் (4)
- கவிதை (29)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (149)
- குறும்படம் (13)
- குற்றமுகங்கள் (25)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (117)
- சினிமா (535)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (1)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (11)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (20)
- பயணங்கள் (24)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (54)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (2)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
- ஷேக்ஸ்பியரின் உலகம் (1)