அஞ்சலி

கலை விமர்சகர், நண்பர் தேனுகா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.மிகச்சிறந்த கலை ஆளுமை தேனுகா. கும்பகோணம் செல்லும் ஒவ்வொரு முறையும் அவசியம் அவரைச் சந்தித்துவிடுவேன்.

தமிழகத்தின் அரிய கலைச்செல்வங்கள் குறித்து நிறையப் பேசியும் எழுதியும் வந்தவர் தேனுகா. அவரோடு ஒன்றாகப் பயணித்துத் தாராசுரம் கோவில் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.ஒரு நாள் முழுவதும் அந்தச் சிற்பங்களின் சிறப்புகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியக்கலைகள், இசைமரபுகள், ஒவியம், நடனம், உலக இலக்கியம் என அவர் ஆழ்ந்த வாசிப்பும் விரிந்த ஞானமும் கொண்டவர். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டு விழாக்களில் இரண்டு முறை கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

நிறைந்த அன்பும் தோழமையும் கலைமேதமையும் கொண்ட அவரது இழப்பிற்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0