உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடி தந்த சிறந்த அறிவியலாளரும், உயர்ந்த பண்பாளரும் ,முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாமுக்கு என் அஞ்சலிகள்.
டாக்டர் கலாம் இளைஞர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. கல்வி குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் கலாம் பேசிக் கொண்டேயிருந்தார். அந்தக் கனவை நினைவேற்றுவது அனைவரின் கடமை,
கலாம் அவர்கள் புவியிலிருந்து மறைந்தாலும் அவர் உருவாக்கிய கனவுகள் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.
•••