கவிஞரும் எழுத்தாளருமான கௌரிசங்கர் இன்று கோவில்பட்டியில் காலமானார்.
எழுபதுகளில் எழுதத்துவங்கிய கௌரிசங்கர் மழை வரும்வரை என்ற கவிதை தொகுப்பையும் முந்நூறு யானைகள் என்ற சிறுகதை தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்.
வம்சி பதிப்பகம் அவரது மொத்த படைப்புகளையும் வெளியிட்டுள்ளது.
திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட கௌரிசங்கர் சுந்தரராமசாமியின் ஜேஜேசில குறிப்பகளைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பும் சில ஆண்டுகள் சென்னையில் அலைந்து திரிந்தார்.
இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். காருகுறிச்சி அருணாசலம் குறித்த ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அவரது மறைவு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு என் அஞ்சலிகள்