அரங்காடல்

கனடாவின் டொரோண்டோ நகரில் செயல்பட்டுவரும் மனவெளி கலையாற்றுக்குழு எனும் நாடக அமைப்பு  நவீன தமிழ்நாடகங்களை மிகச்சிறப்பாக நிகழ்த்தி வருகிறது.

ஆண்டுதோறும் புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்வதற்கு அரங்காடல் என்ற நிகழ்வினையும் ஏற்பாடு செய்துவருகிறார்கள், இது குறித்து நண்பர் செல்வன் வழியே நிறைய அறிந்திருக்கிறேன்.

2012 ஜனவரி எட்டாம் தேதி டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள அரங்காடல் நிகழ்வில் எனது கடவுளின் குரலில் பேசி என்ற சிறுகதையின் நாடகவடிவம் நிகழ்த்தப்பட இருக்கிறது, இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவர் செழியன். நெறியாள்கை செய்பவர் அ.புராந்தகன்.

சவரக் குறிப்புகள் என்ற பெயரில்  இந்த நாடகம் மேடையேறவுள்ளது. கனடாவிலும் அயலிலும் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த நாடகநிகழ்வுகளில் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

**

0Shares
0