எனது இடக்கை நாவல் குறித்து நண்பர் பவா.செல்லத்துரை மதுரையில் சிறப்பான கதைசொல்லுதலை நிகழ்த்தியிருக்கிறார்.
நாவலின் முக்கியப்புள்ளிகளைத் தொட்டுப் பேசி கேட்பவர்களை இந்நாவலை வாசிக்கும்படி தூண்டியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
நவீன கதைசொல்லியாக பவா தமிழ் இலக்கியத்தின் முக்கியச் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் கதை சொல்லும் விதம் ஒரு நண்பன் நேரில் நம்மிடம் பேசுவது போல அத்தனை நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுகள் பவா.
நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் முத்துகிருஷ்ணனுக்கும், காணொளி மூலம் நிகழ்வை ஆவணப்படுத்திய ஸ்ருதி டிவி கபிலனுக்கும் மிகுந்த நன்றி.
பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 2 | எஸ்.ராமகிருஷ்ணன் – இடக்கை
இடக்கை நாவலை வாங்குவதற்கு:
இடக்கை
Rs 375.00
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
044 -23644947 அலைபேசி – 9600034659
desanthiripathippagam@gmail.com
online shopping