இயல் விருது 2022 – வாழ்த்துகள்

கனேடிய இலக்கியத் தோட்டம் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது சிறந்த எழுத்தாளரான பாவண்ணன்  மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதி இருவருக்கும் வழங்கப்படுகிறது.

முருகபூபதி
பாவண்ணன்

இருவரும் எனது நண்பர்கள். சிறந்த படைப்பாளிகள். தொடர் செயல்பாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தியவர்கள். பாவண்ணன் சிறந்த மொழிபெர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். முருகபூபதி இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றிருக்கிறார். மிகத்தகுதியானவர்களை தேர்வு செய்து கௌரவிக்கும் இயல்விருதுக் குழுவிற்கும் நண்பர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

0Shares
0