உலகெங்கும் வாசகர்களால் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென்கவிதைகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் , ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆயிரத்து ஒரு அராபிய இரவுகள். ஆகிய ஏழு புத்தகங்கள் குறித்து நான் விரிவான ஏழு சொற்பொழிவுகளை நடத்த இருக்கிறேன்
உலக இலக்கியங்கள் குறித்து தமிழில் முதன்முறையாக இந்தத் தொடர் உரைகள் நடைபெற இருக்கின்றன.
உயிர்மையுடன் ருஷ்யக் கலாச்சார மையமும், ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப்பேரவையும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கிறன
நவம்பர் 21 திங்கள் முதல் 27 ஞாயிறு வரை தினசரி மாலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது
தினம் ஒரு புத்தகம் குறித்து ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்து அரைமணி நேரக் கலந்துரையாடலும் நடைபெறும்.
இடம் : ருஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கா ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 18
நாள் : நவம்பர் 21 முதல் 27 வரை
நேரம் : தினமும் மாலை 6 மணி
உலக இலக்கியத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடவும் அவர்களது படைப்புகளை மறுவாசிப்பு செய்யவும் உத்வேகம் தரும்படியான முன்முயற்சியிது
இளம்வாசகர்கள், கல்விப்புலங்களில் இலக்கியம் பயிலுவோர், மற்றும் இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரும் அவசியம் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்
***
.