எதிர்ப்புக்குரல்

தமிழக மீனவர் பிரச்சனை சார்ந்து இணையத்திலும் டுவிட்டரிலும் நடைபெற்று வரும் ஆவேசமான கண்டனங்கள். எதிர்ப்புக்குரல்கள் மிகுந்த உத்வேகம் தருவதாக உள்ளது

மாற்று ஊடகங்களைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை விட இது போல நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவது முக்கியமானது, இணையத்தில் ஒலிக்கும் இந்த ஒருமித்த குரல் நமது விழிப்புணர்வின் அடையாளம், மனசாட்சியின் வெளிப்பாடு.

நான் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த பொதுவெளியிலும் உறுப்பினராக இல்லை, அதில் எனக்கு விருப்பமும் இருந்ததில்லை, ஆனால் கடந்த சில நாட்களாக டுவிட்டரில் அனுப்பபடும் செய்திகளை ஒரு நண்பரின் மின்னஞ்சல் வழியாக வாசித்து வருகிறேன், இந்த ஆவேசமும் கோபமும் உண்மையானது.

 இணையம் வெறும் பொழுதுபோக்கு ஊடகமில்லை என்பதை அடையாளம் காட்டும் முன்முயற்சியிது,  இதற்குக் காரணமாக இருந்த அனைவரையும் பாராட்டுகிறேன்

எல்லைதாண்டி மீன்பிடிக்கிறார்கள் என்ற பொய்காரணத்தைச் சொல்லி நடைபெறும் மீனவர் படுகொலைகளை இனியும் மூடிமறைக்கமுடியாது

தமிழக மீனவர் பிரச்சனையைக் கண்டுகொள்ளாத மத்திய அரசையும். இந்தப் பிரச்சனையின் தீவிரம் அறியாத அதிகார அரசியல்வாதிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மீனவர் பிரச்சனை சார்ந்த பங்கேற்பிற்கான சில சுட்டிகளை இணைத்திருக்கிறேன்

https://www.savetnfisherman.org/

 https://www.facebook.com/savetnfisherman

https://twitter.com/savetnfisherman

***

0Shares
0