இன்றுள்ள இளம்வாசகருக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக நான் அவரது படைப்புகளில் இருந்து தேர்வு செய்து என்றும் சுஜாதா என்ற புத்தகம் ஒன்றினைத் தொகுத்திருக்கிறேன்
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சிறந்ததைத் தேர்வு செய்து தனியே ரீடர் என்று தொகைநூலாகக் கொண்டுவருவது உலகெங்கும் ஒரு மரபாக உள்ளது,
அதிலிருந்து மாறுபட்டு ஒரு எழுத்தாளரின் ஆளுமையை, பன்முகத்தன்மையை முதன்மைப்படுத்தும் விதமாக நான் இந்தத் தொகைநூலை உருவாக்கியிருக்கிறேன்,
எழுத்து, வாழ்க்கை, கணிப்பொறி, சினிமா, ஒவியம், விஞ்ஞானம், ஹைக்கூ, புதுக்கவிதை, ஆன்மீகம், செவ்வியல் இலக்கியம், மொழியாக்கம், உலக இலக்கியம். யாப்பிலக்கணம். பகடி, கிரிக்கெட். உயிர் அறிவியல். நாடகம். இசை என்று பரந்துபட்ட அவரது விருப்பத்தினை முதன்மைப்படுத்தி சுஜாதா எழுத்துக்களின் குறுக்குவெட்டுத்தோற்றம் போல இந்தத் தொகைநூல் உருவாக்கப்பட்டிருக்கிறது,
அரிய புகைப்படங்கள். அழகான வடிவாக்கத்தில் முந்நூறு பக்கங்களுக்கும் மேலாக உள்ள இப்புத்தகத்தினை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது
இதன் வெளியீட்டுவிழா உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் சுஜாதா விருதுகள் 2011 நிகழ்ச்சியோடு இணைந்து நடைபெறுகிறது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நடைபெறுமிடம்
தேவநேயப்பாவாணர் மாவட்ட நூலகம், 735 அண்ணாசாலை, சென்னை
நாள் 03.05.11 செவ்வாய்கிழமை. நேரம் . மாலை 6 மணி