கடந்த ஒருவார காலமாக நான் நடத்திய உலகசினிமா பேருரையின் இறுதிநாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது, ஏழு உரைகளில் சாப்ளின் பற்றிய சொற்பொழிவே ஆகச்சிறந்ததாக இருந்தது எனப்பலரும் பாராட்டினார்கள்,
அத்துடன் அன்று நடைபெற்ற எனது நான்கு நூல்களின் வெளியீட்டுவிழாவும் சிறப்பாக நடைபெற்றது, இந்த விழாவில் எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
உலகசினிமா பேருரைக்கு என்னோடு இணைந்து பல்வேறு விதங்களிலும் ஒத்துழைப்பு செய்த நண்பர்கள் மாரிமுத்து என்கிற மணி, சொர்ணவேல், எழுத்தாளர் அ. முத்துலிங்கம், வழக்குரைஞர் யேசுதாசன், மனோ, கோபிகிருஷ்ணா, கார்த்திகேயன், சதீஷ், விவேகானந்தன், பரணீதரன், கார்த்திகேயன் தெய்வீகராஜன், ஜோதி, ஷாஜி, அழகிய மணவாளன், கனடாமூர்த்தி, ஆடிட்டர் சந்திரசேகர், முத்துகிருஷ்ணன், ஆர்தர் வில்சன், பிரகாஷ், அருண்பிரசாத், ஆகியோருக்கு என் மனம் நிறைந்த நன்றி
என் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வருகை தந்த தோழர் ஜீ. ராமகிருஷ்ணன், இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் A R முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன். இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி, இயக்குனர் மணிகண்டன், இயக்குனர் ஜீவா சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இயக்குனர் ஆல்பர்ட், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், டாக்டர் ஸ்ரீதர், கவிஞர் அறிவுமதி, கவிஞர் ரவி சுப்ரமணியன், எழுத்தாளர் சந்திரா, ஏடிஎஸ்பி செந்தில்குமார், ஆகியோருக்கும், பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் இணைய நண்பர்களுக்கும், திரைக்கலை பயிலும் மாணவர்களுக்கும் , அனைத்து பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
எனது செயல்பாடுகளுக்கு என்றும் துணைநிற்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் தீராத நன்றி.
என் இலக்கியச்செயல்பாடுகளை வழிநடத்தும் ஆசான் எஸ்ஏபெருமாள் அவர்களுக்கும் கவிஞர் தேவதச்சன் அவர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்
புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்த செல்வி, ராஜேஷ், தனசேகர், மற்றும் பதிப்பக ஊழியர்கள், நண்பர்கள் அனைவரும் என் நன்றிகள்
•••