ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு
கதை சரி .
என ஒரு கதையிருக்கிறது.
நான் அறிந்தவரை
உலகிலேயே மிகச்
சிறிய கதைகளில்
இதுவே மிகத்தொன்மையானதாக இருக்ககூடும்.
இந்த ஒற்றைவரி தரும்
கதையின் பன்முகதன்மையே
இன்று நவீன கதையின் முக்கிய
அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது.. இக்கதை
கதையைக் கேட்பவன்
மனதில் தானே உருவாக்கி கொள்ளவேண்டிய
கதையாக உள்ளது.
நரி கதைகளின் உலகில்
ஆதிகுடி. இந்தியர்களும்
கிரேக்கர்களும் அரேபியர்களும்
கீழைத்தேய நாடுகளின்
பயணிகளும் நரியைப்
பற்றிய விசித்திரக்
கதைகைளப் புனைந்திருக்கிறார்கள். நரி கதைகளில் தனது கால்த்தடத்தைப் பதித்து
பல நுற்றாண்டாகிவிட்டது. நரியைப் பற்றிய தந்திரச்செய்திகள் யாவும் கூட கதைவழியே
தான் வெளியாகின.
கௌதம புத்தர்
கூட தனது வழிப்பயணத்தில் ஒரு செந்நரியை காண்கிறார்.
அது திரும்பி
அவரைக் கண்டு
சில நிமிஷம்
நின்று போகிறது
என பௌத்தசாரம்
கூறுகிறது.
யுதிஷ்ட்ரனின் யாகத்தில் சொர்ணத்தில்
புரண்டு ஒரு நரி தன் உடலரின் பாதியை
தங்கமாக்கியதாக்கி பாரதக்கதையும்
கூறுகிறது இப்படி
கதையின் நாவு தீண்டியதும் நரிகள்
கதையுலகின் விலக்கமுடியாத
நித்ய ஜீவிகளாகி
விட்டன. கதைகள்
தனக்கென தனித்த
வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவை ஒரிடத்தில் தங்குவதேயில்லை,
அது நம் ஆடைகளில் கண்களில்,
சொற்களில், உறக்கத்தில்,
பயணத்தில் ஒட்டிக்
கொண்டு ஒரிடம்
விட்டு வேறிடம்
போய்விடுகின்றன என்று
சொல்கிறார்கள்.
கதை, காலத்தின் தொல்வடிவம்.
கதையை சொல்வதும்
கேட்பதும் வெறும்பொழுது
போக்கல்ல அது ஒரு சடங்கு,
ஒரு வாழ்முறை,
கதையை சொல்லும்
போது சிலநேரம்
கதைக்குள்ளிருந்த சில உருவங்கள் வெளிப்பட்டு
சொல்பவனையும் கேட்பவனையும்
விழுங்கி விடுமென்ற
பயமிருந்தன. ஒரு மறைக்கப்பட்ட சொல் போதும் அதிரிருந்து
ஒரு உயிர்
பிறந்து விடுமென
பயந்தார்கள். கதை ஒரு ரகசிய
சங்கேதம் போரிருந்தது.
ஒரு கதையை
சொல்வதன் வழி ஒரு இனக்குழு
தனது வேட்கையை,
கொண்டாட்டங்களை, கசப்பை,
வெறியை வெளிப்படுத்துகிறது.
கடவுளுடன் பேசுவதற்கு கதையே
பாஷையாக இருப்பதாக
நம்பபட்டது. ஒரு கதையை எப்போதுகேட்பது,
எப்போது சொல்வது
போன்றவை மிக ரகசியமாக வைத்திருக்கபட்டன. கதையைக்கேட்பவன், கதையை சொல்பவனைக்
காண்பது கூட பல நேரங்களில்
தடைசெய்யப்பட்டிருந்தது. கதையை
பண்டமாற்றம் போல பரிமாறிக் கொண்டார்கள்.
கதையை புனையும்
மனம் கொண்டவன்
சிலவேளைகளில் மாந்திரீகனைப்போல அடையாளம் காணப்பட்டான். கதைகள்
கேட்பவனின் உடரில்
குத்தப்பட்ட பச்சை
போல உடலோடு
சேர்ந்து விடுகின்றன.
குகைவாழ்வியல் காலத்தில் ஒரு நாள் வேடன்
மானை துரத்திக்கொண்டு ஒடுகிறான். மான் வெகுவேகமாக
தப்பியோடுகிறது. பகல் மெல்ல மறைந்து
மாலை ததும்புகிறது.
நீண்ட மலையின்
அடிவாரத்தில் பாறைகளை
தாவிக்கடக்கிறது மான்.
மாலையும் மறையதுவங்குகிறது. மானை துரத்தி வந்தவன்
தனது பார்வையைவிட்டு
மான் தப்பிவிடாமல்
கவனித்தபடியே பின் தொடர்கிறான். சட்டென
ஒரு பாறை தாண்டும் போது இருள் கவ்வத்துவங்கி
மான் பார்வையில்
இருந்து மறைந்துவிட்டது.
எங்கே மறைந்தது
மான் எனப் புரியவில்லை
பகல் இரவு என்பதன்
தோற்றம் பற்றிய
தெளிவு பிறக்காத
நாளது. அவன் மானை இருள்
பிடித்து விழுங்கிவிட்டதாக கற்பனைசெய்தபடி துக்கத்துடன் தனது குகைக்குத் திரும்புகிறான்.
இருள் பிரம்மாண்டமான
தனது நாவால்
மானை சுருட்டி
தின்று கொண்டிருப்பதாக
படுக்கையில் எண்ணம்
பெருகிறது. இரவில்
அவன் கனவில்
அதே மான் ஒடத்துவங்குகிறது. திரும்பவும்
விரட்டுகிறான் மான் அப்போதும் கைவசப்படவில்லை.
மான் ஆகாசத்தில்
தாவி ஒடி மறைகிறது.. திடுக்கிட்டு
விழித்த வேடன்
குகை எங்கும்
இருளின் நடமாட்டமிருப்பதை அச்சத்தோடு பார்க்கிறான். மனம் பயமும் புதிருமாக
ஒரு குழப்பத்தை
உண்டுபண்ணுகிறது.
இதை எவரோடு தீர்த்துக்கொள்வதென தெரியாமால் நடந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒன்று
கலந்து ஒரு புனைவை சிருஷ்டிக்கத்
துவங்குகிறான், ஒரு மான் இருளில்
ஒடியதும் இருமான்களாக
பிரிந்து விடுகிறது.
ஒன்றை இருள்
சாப்பிட்டது இன்னொரு
மான் மாய வடிவம் கொண்டு
தப்பி கனவில்
சுற்றி வருகிறது.
இருள் விழுங்கிய
மானின் குரல்
தான் இரவினுள்
கேட்கும் நெறுநெறு
ஒசை என ஒரு கதையை
புனைந்து விடுகிறான்.
கதையின் சுழல்
விரியத் துவங்கிவிடுகிறது. இது போல மனிதமனம்
எப்போதெல்லாம் பயமும்
திகைப்பும் கொள்கிறதோ,
எப்போதெல்லாம் சந்தோஷமும்
கொண்டாட்டமும் கொள்கிறதோ,
எப்போது துக்கமும்
நிர்கதியும் கொள்கிறதோ,
அப்போதெல்லாம் அவை கதைகளை சிருஷ்டிக்கின்றன. இப்படி தான் கதைகள்
உலகிற்கு வந்திருக்க
வேண்டும்.
கதைகேட்பதில் மனிதர்களுக்கு இருக்கும்
விருப்பம் போல பலமடங்கு விருப்பம்
கடவுளுக்குமிருக்கிறது. சிவனிடம்
பார்வதி தான் ஒருபோதும் கேட்டு
அறியாத கதையொன்றை
கேட்க விரும்புகிறாள்.
சிவன் எந்த கதையைச் சொல்லத்
துவங்கும் போதும்
அது முன்பே
தனக்கு தெரிந்த
கதை எனச் சொல்கிறாள். வேறு வழியின்றி அவள் கதையை அவளிடமே
சொல்ல துவங்கியதும்
இது தான் கேட்டறியாத கதை என சுவாரஸ்யமாக
கேட்டதாகவும், பாதியில்
கதையை சொல்ரிமுடித்து
தொடர முடியாமல்
சிவன் தனக்கும்
இதற்குமேல் தெரியாது
என எழுந்து
போய்விட்டதாகவும் ஒரு கதை இருக்கிறது.
முடிக்கபடாத கதைகள் தான் கதைகள் உயிர்த்திருப்பதற்கான எளிய வழி. கதையைப்பற்றி
பேசுவதற்கு நம்மிடையே
கதையைத் தவிர வேறு உபகரணங்கள்
இல்லை. இதனால்
தானோ என்னவோ
கதையைப்பற்றிய கதைகளே
நம்மிடையே பல நுறு இருக்கின்றன.
கதைக்கு கால் உண்டா
என்று கேட்பவர்கள்
எப்போதுமிருக்கிறார்கள். கதையின்
இயல்புபடி கதைக்கு
கால் இருப்பதோடு
மட்டுமில்லாது அது ஒரிடத்தில் நிற்காது
தப்பி ஒடுவதும்
தனது விருப்பத்திற்கேற்ப எவரையும் வளைத்து விடுவதுமுண்டு.
பொதுவாக சொல்கதைகள்
எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தையும் உருவாக்குவதில் விருப்பம் கொள்வதில்லை.
அது ஒரு அரசனை உருவாக்குகிறது
ஒரு முட்டாளை
உருவாக்குகிறது. அவர்கள்
தனியான பெயர்
கொண்டவர்களில்லை பதிலாக
அவர்களின் இயல்பும்
அது சார்ந்த
செயல்களுமே முக்கியப்படுத்தபடுகிறது. அரசனோ
திருடனோ முட்டாளோ
அவனுக்கு பெயரிட
வேண்டும் என்றோ
அவனை தனியானதொரு
மனிதனாக சித்தரிப்பதிலோ
கதை முயற்சிப்பதேயில்லை. கதையில் வரும் அரசன்
ஒருமனிதன் என்கிற
அளவே போதுமானதாக
இருக்கிறது. அவனுடைய
பிரச்சனை தான் முக்கியம். பெரும்பான்மைக்
கதைகளில் அரசர்களுக்கு
பெயரேயிருப்பதில்லை
கதை ஒரு ஊரிலே
ஒரு ராஜா என்று துவங்குவதை
கேட்கும்போது. அந்த ஊர் எப்படி
இருக்கும் சிறியதா,
பெரியதா, மலைசார்ந்ததா?
கடல் சார்ந்ததா?
என யோசனைகள்
நீளும், ஆனால்
இதைப்பற்றி தீர்மானிப்பதை
கதை கேட்பவனிடமே
விட்டுவிடுகிறது. கேட்பவனின்
மனம் அவன் இயல்பு சாந்து
ஒரு ஊரை முடிவுசெய்து கொள்கிறது
கதைசொல்பவன் ஒரு எறும்பை
போல கதையின்
மேலே ஊர்ந்து
செல்வதும் தலைகீழாக
பயணிப்பதுமுண்டு. அதனால்
அவனை தொடர்ந்து
நாமும் பின் தொடரவேண்டிய நிலை உருவாகிறது. அவன் தனது குரல்
வேகத்தை தொடர்ந்து
முறுக்கேற்றுகிறான் சிலநேரம்
இதன் விசை அதிகமாகும்போது வேண்டுமென்றே
சில நிமிஷங்கள்
மௌனமாகிறான் அப்போது
கேட்பவனின் மனம் கதையின் முடியாத
சாத்தியங்களை தானே புனைந்து கொள்ளத்
துவங்குகிறது. ஒரு மனிதனை அரக்கனாக
மாற்ற இரண்டு
பற்களை மட்டும்
வெளியே துருத்திக்கொண்டு வைத்தால் போதும் ஒரு கதை சொல்பவன்
சொன்னது நினைவிற்கு
வருகிறது.
.கதைகள் எத்தனை
ஆயிரம் முறை,
எத்தனை ஆயிரம்
வருடங்கள் சொல்லபட்ட
போதும் அதற்கு
வயதே ஆவதில்லை.
பதிலாக கதை இன்று காலை தான் பிறந்த
சிசுவைப்போல தனியான
மணமும் பிசுபிசுப்பும்
கொண்டிருக்கிறது, காரணம்
தெரிந்த கதை என்ற போதும்
கதை ஒருபோதும்
ஒன்று போல சொல்லப்படுவதில்லை. மாறாக
கதை சொல்லப்படும்
சூழல் சொல்முறையில்
ஒவ்வொரு முறையும்
புதுக்கதையாகவே சொல்லப்படுகிறது. ஈசாப்பின் நீதிக்கதையான காகம்
வடையை திருடிய
கதை .கிரேக்கத்திரிருந்து பயணித்து உலகமெங்கும் இன்று
வரை திரும்ப
திரும்ப சொல்லப்ட்டுக்
கொண்டிருப்பது இதற்கொரு
முன்னுதாரணம். .
எது முதல் கதையாக
இருந்திருக்க கூடும்.
உலகில் கதை சொல்லபடுவதற்கான சான்றான
அமைந்த ஒரு கல்சிற்பமொன்று அகழ்வாய்வில்
கண்டெடுக்கப்பட்டதாகவும் அது ஆதி கிரேக்க
சிற்பமென்றும் அதில்
ஒரு முதலையின்
மீது குரங்கு
அமர்ந்து செல்வதாகவும்
அக்கதை முதலையும்
குரங்கும்கதை தான் என்றும் ஏ.கே.ராமானுஜம்
சொல்கிறார். இக்கதைதான்
இன்றுவரை சான்றுகளுடன்
இருக்க கூடியதொன்மையான
கதை என்கிறார்கள்.
கதையின் கால்தடத்தை
காண்பது அறியது.
வானில் பறவைகள்
பறந்த சுவடை
யாராவது காண முடியுமாயென்ன கதைகளும்
அதைப் போலதானிருக்கின்றன.
குரங்கும் முதலையும் என்ற கதையும் கூட ஒரு பௌத்த
கதைதான். இக்கதை
பலவேறு வடிவங்களில்
பல்வேறு நாடுகளுக்கு
பயணித்திருக்கிறது. கிறிஸ்துவின்
காலத்திற்கு நான்கு
ஐந்து ஆண்டுகள்
முற்பட்டாக கருதப்படும்
இக்கதை உலகின்
தொன்மையான பயணி.
ஒரு மார்க்கோ
போலா போல, ஒரு வாஸ்கோடகாமா
போல, யுவான்
சுவாங்போல நீண்ட
பயணம் செய்த
யாத்ரீகன் ஆனால்
இந்த பயணிகளைப்போல
இக்கதை தனது சொந்த அடையாளத்தை
முன்வைக்கவில்லை.
கதையின் வழியே பரிவர்த்தனை
நடைபெறுகிறது. இந்த பரிவர்த்தனை தனிமனிதனின்
ஆசைகள் வெறுப்புகள்
ரகசியங்கள் மட்டுமல்ல
சமூகத்தின் மீதான
தனி மனிதனின்
கோபம் இயலாமை
மற்றும் அதிகாரத்தை
மறைமுகமாக பரிகசிப்பது
போன்றவையும் கதை வழியே தான் சாத்தியமாகின்றன.
இதுபோலவே கதைகளுக்கும் திருடர்களுக்கும் உள்ள உறவு பிரிக்கபட
முடியாதது. பௌத்தகால
மக்களிடையே இருந்து
வந்த வாய்மொழி
கதைகளில் கூட திருடர்கள் பிரதானமானவர்களாக இருக்கிறார்கள். கதை திருடர்களை
உருவமாகவே பெரிதும்
பயன்படுத்துகின்றது.
ஒரு திருடன் ஒரு வீட்டிற்குள் இரவு திருடப்போனான். திருடிவிட்டு
வெளியேறும்போது அவன் விரல் நகம் உடைந்து தரையில்
விழுந்து விட்டது.
தான் அகப்பட்டாலும்
தன்நகம்அகப்பட்டு விடக்கூடாதென
அவன் இருளிலே
தேடத்துவங்கினான் கைக்குநகம்
கிடைக்கவேயில்லை. மெல்ல
தனது கையைவிட்டு
துழாவி சுத்திசுத்தி
தேடி வீட்டுக்காரனின் முகத்தை பற்றித் தேட வீட்டுக்காரன் விழித்து
திருடனை மடக்கிவிட்டான்.
திருடன் இத்தனை
அக்கறையாக நகத்தைத்
தேடக்காரணம் ஒரு துளி நகம் கிடைத்தால் கூட தன்னை மந்திரம்
வைத்துபிடித்துவிடுவார்கள் என்ற பயம். கதை திருட்டையல்ல மனதின்
ஆழத்தில் புதையுண்ட
பயத்தை பற்றி
பேசுகிறது.
கதை சொல்பவர்கள் ஏற்கனவேயுள்ள
உலகினை மாற்றி
தங்கள் விருப்பத்தின்
படியான உலகை உண்டாக்கி கொள்வார்கள்.
கதைசாஸ்திரப்படியாக பூமிக்கு
கீழே ஏழ உலகம் இருப்பதாக
நம்புகிறார்கள். மகாதலம்,
ரசாதலம், தராதலம்,
சுதலம், நிதலம்,
விதலம், அதலம்,
என்ற ஏழு உலகில் ஏழு விதமான வாழ்க்கை
நடப்பதாக நம்புகிறார்கள்.
இதுமட்டுமல்ல ஏழு விதமான கடல்,
ஏழு விதமான
மலை என மனம் கதை தனக்கென தனித்த
கதாநிலவியலையே உண்டாக்குகின்றது.
கதையில் விசித்திரமான மிருகங்கள்,
மனிதர்கள், தாவரங்கள்
உண்டாகின்றன. நிகழ்ச்சிகள்
உருமாறுகின்றன. கடல் நம் கண்களால்
அருந்தி தீராத
அதிசயம் இதை நாம் காலம்
காலமாக பர்த்துக்கொண்டேயிருக்கிறோம் இதன் வியப்பும் பயமும்
நம்மைவிட்டு அகலவேயில்லை
இந்த அதிசயத்தை
கதை தனது புனைவால் வேறு ஒரு தளத்திற்குக்
கொண்டு செல்கிறது.
இயற்கையின்தோற்றவியல் பற்றிய கதைகள்
முடிவற்றவை, இவற்றை
தனித்து ஆய்வு
செய்யும் போது நமது புராதன
மனம் எப்படி
உலகை புரிந்து
கொண்டிருக்கிறது என்பது
புலனாகிறது கதை இயற்கையின் தோற்றவியலை
சொல்லதுவங்குவதோடு அந்த மக்களின் கதை வழியாக கலாச்சார
மறு மதிப்பீடுகளை
முன்வைத்துவிடுகிறது. போபால்
அருகேயுள்ள பழங்குடியினர்கள் சொல்லும் கதையை ஒரு முறை கேட்டேன்
அதுவும் இயற்கையின்
தோற்றவியல் பற்றியது
தான். கதை .
மின்னல் ஏன் ஒளிர்கிறது
? என்பதை பற்றியதாகயிருந்தது. ராமனும் லட்மணரும் ரொம்ப
பிரியமான அண்ணன்
தம்பிகள். ஒருத்தரை
ஒருத்தர் பிரியவேமாட்டார்கள், சீதையை மீட்டு வந்து
ராமர் அரசாள
வந்த பிறகும்
ரெண்டு பேரும்
இணைபிரியாம இருந்தது
சீதைக்குப் பிடிக்கவில்லை.
அவர்களை பிரிக்க
திட்டம்போட்டாள். அதன்படி
லட்சுமணன் தன்னை
அடைய ஆசைப்படுவதாக
பழிபோட்டாள். ராமன்
நம்பவேயில்லை, பிறகொருநாள்
சீதை லட்சுமணன்
ஒரு பெண்ணை
ஏமாற்றிவிட்டதாக, அதை நிருபிக்க
அவன் படுக்கையில்
பெண்ணின் கேசத்தையும்
ரத்தகறை படிந்த
துணிகளையும் போட்டாள்,
இதைப் பார்த்த
ராமனுக்கு கோபம்
வந்து தம்பியை
வீட்டைவிட்டு துரத்திவிட்டான்.
எங்கே போவது எனத் தெரியாமல் அலைந்த
லட்சுமணன் ஊர்சுற்றியலைந்து கடைசியாக நாகலோகத்திற்கு வந்து
சேர்ந்தான். அழகான
வாபனான அவனை நாகராசனுக்கு ரொமபவும்
பிடித்துபோனதால். விருந்தும்
உபசாரமுமாக கவனித்தான்.
ஒரு நாள் ராமனுக்கு உண்மை
தெரிந்து தன் தப்பை உணர்ந்து
தம்பியைத் தேடி ஆள் அனுப்பினான்
.
நாகலோகத்திற்கு ஆள் வந்து
கூப்பிடவே லட்சுமணன்
புறப்படுவதாக சொன்னதும்
அவனுக்கு ஒரு பெட்டியை பரிசாக
தந்து ஊருக்கு
போகும் வரை இதை திறக்ககூடாது
என எச்சரிக்கை
செய்து அனுப்பினான்.
பாதிவழி வரும்போதே
பெட்டியில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஆசை கொண்டு லட்சுமணன்
திறந்து பார்த்தான்
பெட்டியில்ருந்து அழகான
இளம்பெண் வெளிவந்து
அவனை பார்த்து
சிரித்து விட்டு
வெளியே ஒடினாள்.லட்சுமணன் பின்னாடியே
துரத்தினான்.
அவள் வானில்ஏறி சட்டென
ஒரு மின்னலாக
உருவெடுத்து ஒளிர்ந்தபடி
ஒடி மறைந்து
விட்டாள்.லட்சுமணன்
தன் வில்லோடு
துரத்தி ஒடினான்
பிடிக்க முடியவேயில்லை.
இப்போதும் மின்னல்
வெட்டியதும் இடி இடிப்பதற்கு இதுவே
காரணம் மின்னலாக
நாகராஜனின் மகள் தப்பி ஒடுகிறாள்.
அவளை பிடிக்க
முடியாமல் கூடவே
வில்லோடு ஒடுகிறான்
லட்சுமணன். அந்த வில் ஒசை தான் இடியாக
சப்தமிடுகிறது என்கிறார்கள்.
இக்கதை இயற்கையின்
தோற்றத்தை பற்றியதாக
மட்டுமின்றி ராமாயணத்தை
வேறுவிதத்தில் புதிய
கதையாக மாற்றுகிறது.
இக்கதையில் வரும்
சீதை புனிதம்
கலைந்தவளாக, அன்றாடப்பெண்ணாக வருவது சிறப்பாகயிருக்கிறது. சொல்வது
ஆதிவாசியாக இருந்த
போதும் கதைசொல்லும்
முறை மிக நவீனமாகவும் புதிய
கதையாடலை கொண்டிருப்பதும் ஆச்சரியமாகயிருந்தது.
கதைகள் காலத்தினுள் அலைந்து
கொண்டிருந்த போதும்
அதன் நாவு காலத்தை விட்டு
வெளிதுரம் நீண்டு
யாவையும் தீண்டிக்
கொண்டிருக்கிறது, கதையை
நாம் எதிர்கொள்ளும்
போது கதையின்
பகுதியாக நாம் மாறிவிடுவதோடு , கதை நம்மையே தன்னுள்
சுருட்டிக் கொண்டு
விடுவதும் தான் மரபான கதை சொல்ரின் விளக்கமுடியாத
விந்தை.