கதை சொல்வது

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் சுட்டி விகடன் இதழ் சார்பில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செம்மொழி பூங்காவில் நடைபெற்ற அந்த நிகழ்வில் குழந்தைகளுக்குக் கதை சொன்னேன். அவர்களும் எனக்குப் புதிய கதைகளைச் சொன்னார்கள். அந்தப் புகைப்படங்களைத் தற்செயலாக இன்று மீண்டும் காண நேர்ந்தது.

25 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்காக நிறையப் பள்ளிகளுக்குப் போயிருக்கிறேன். குறிப்பாகக் கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லியிருக்கிறேன். மதியம் 3 முதல் 4 வரை ஒருமணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கித் தருவார்கள். பிள்ளைகளின் உற்சாகமும் புதிய கதைகளை அவர்கள் சொல்லும் விதமும் மறக்கமுடியாதவை.

பள்ளிதோறும் மாணவர்களைக் கொண்டு கதைசொல்லும் குழுக்களை உருவாக்கலாம். மாதம் ஒரு கதைசொல்லியை அழைத்து கதை சொல்ல வைக்கலாம். பள்ளி மாணவர்கள் சொல்லும் கதைகளைக் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ஏற்றலாம். மாநில அளவில் கதை சொல்லும் போட்டிகள் நிகழ்த்தலாம். இப்படி செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

கடந்து வந்த பாதையில் இது போல மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்திருக்கிறேன் என்பது மனதிற்கு நிறைவளிக்கிறது.

0Shares
0