கருத்தரங்கில்

நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் நான் உருவான விதம் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகள் யாவும் ஸ்ருதிடிவி மூலம் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்த சுரேஷ்பிரதீப். அகரமுதல்வன். காளிபிரசாத், வசந்தபாலன். சுந்தரபுத்தன். வேல்கண்ணன், பாலைவன லாந்தர், மயிலாடுதுறை பிரபு. கடலூர் சீனு, சுரேஷ் பாபு, சௌந்தர் ராஜன், ராம்தங்கம், கவிதைக்காரன் இளங்கோ ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன். நற்றுணை கலந்துரையாடல் அமைப்பின் சௌந்தர்ராஜன். காளிபிரசாத் மற்றும் நண்பர்களுக்கு அன்பும் நன்றியும்

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கவிதா ரவீந்திரனுக்கும். ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதிடிவி கபிலன் மற்றும் சுரேஷிற்கும், நிகழ்விற்காகப் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கலந்து கொண்ட எனதருமை வாசகர்களுக்கும் மிகுந்த நன்றி

நிவேதனம் அரங்கிற்கும் சிறப்பான மதிய உணவைத் தயாரித்து வழங்கியவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

நேரமின்மை காரணமாகக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவில்லை. வேறு ஒரு நாளில் வாசகர்களுடன் கலந்துரையாடல் மட்டுமே கொண்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விருப்பமான நண்பர்களை, வாசகர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்தது நிறைவாக இருந்தது.

0Shares
0