காந்தி

மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர் என்ற தலைப்பில் காந்தி குறித்து நான் பேச இருக்கிறேன்

டிசம்பர் 24 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் எனது புத்தக வெளியீட்டுவிழா நடைபெற உள்ளது, அதில் இந்தத் தனிஉரை நடைபெற இருக்கிறது.

புத்தரைப் போலவே உலகெங்கும் அறியப்பட்ட மகத்தான ஆளுமை மகாத்மா காந்தி. இருவருமே அயராத பேச்சாளர்கள், சமூகப் போராளிகள், மக்களைத் தேடித் தேடி சந்தித்தவர்கள்.

காந்தி குறித்து நிறையப் பேசியும், எழுதியுமிருக்கிறார்கள், ஆனால் காந்தி என்ன எழுதியிருக்கிறார், அவரது ஆதர்ச எழுத்தாளர்கள் யார், காந்தி எழுத்தின் தனித்துவங்கள் எவை என்பதைக் குறித்து அதிகம் பேசப்படவேயில்லை,

இந்திய அரசியல்தலைவர்களிலே அதிகம் எழுதியவர் காந்தி ஒருவரே, அவர் கட்டுரைகள், கடிதங்கள், பத்திரிக்கைத் தலையங்கள், அறிக்கைகள், சுயசரிதை, தனிநூல்கள் என பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார், அவை தொகைநூலாக வெளியாகியுள்ளது,

காந்தி   எழுத்தின் ஊடாக சிறிய பயணம் போல இந்த உரை அமையும்

**

0Shares
0