கி.ராஜநாராயணன் தபால்தலை

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கொண்டாடப்படும், தமிழின் மூத்த படைப்பாளி கி.ராஜநாராயணன் அவர்களின் தபால்தலை வெளியிடும் நிகழ்வு ஜுன் 14 மாலை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது,

இதில் நேசத்திற்குரிய தோழர், ஆர்.நல்லகண்ணு,  அவர்கள் கி.ராஜநாராயணன் தபால் தலையை வெளியிட்டார், அதை நான் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

கரிசல் எழுத்தாளர்கள் சங்கமம் என்ற இந்த நிகழ்வில் கி.ராஜநாராயணனின் இலக்கியப் பங்களிப்பு குறித்து உரை நிகழ்த்தினேன்,

தமிழின் முன்னோடி படைப்பாளிக்கு கிடைத்த இக்கௌரவம் எழுத்தாளர்கள் அனைவரும் மகிழும் தருணமாகும்

இந்த முயற்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த அண்ணன் துரைபாரதி எனும் வித்யாசங்கர் அவர்களுக்கும், தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர் நலச்சங்கத்திற்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0