குண்டூசியின் பயணம்

நித்தியானந்தம்.

ஒரு குண்டூசியை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்ல முடியுமா என்று வியப்பாகவே இருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அக்கடா என்ற சிறுவர் நூலை படித்தேன். விறுவிறுப்பான கதை. நல்ல கற்பனை.

நீண்டகாலமாக யாரும் பயன்படுத்தாமல் போட்டு வைத்த ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் கதையே அக்கடா. ஒவ்வொரு குண்டூசியும் ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிறது அக்கடா. குண்டூசிகளை எல்லாம் இழுத்துக் கொள்ளும் காந்தம் ஒன்றிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அக்கடா எப்படி அந்தப் பிரச்சனையிலிருந்து நண்பர்களைக் காப்பாற்றுகிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பாக எழுதியிருக்கிறார். அனிமேஷன் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

பல்குத்துவதற்காக ஒருவர் குண்டூசியைப் பயன்படுத்தும் போது அதற்கு வரும் ஆத்திரம் சிரிப்பை வரவழைக்கிறது.

இந்தக் கதையைப் படித்தபிறகு குண்டூசியை நம்மால் வெறுமனே பார்க்க முடியாது. நாமும் அதோடு பேச ஆரம்பித்துவிடுவோம்.

அக்கடா
விலை ரூ 130.00

தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
(044)-23644947
desanthiripathippagam@gmail.com

0Shares
0