குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள புன்னகை அரங்கில் வருகின்ற 22ம் தேதி செவ்வாய்கிழமை மாலை நான்குமணிக்கு நடைபெற உள்ளது
இந்த விழாவில் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் அதன் இயக்குனர் சிக்கந்தர், தமிழ் ஒருங்கிணப்பாளர் மதன்ராஜ், எழுத்தாளர்கள் டி செல்வராஜ், பவா செல்லதுரை, முத்துகிருஷ்ணன், எஸ்கேபி கருணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்
புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் நான் உரையாற்ற இருக்கிறேன்
நாள் : 22.01.13 செவ்வாய்கிழமை
இடம்: சென்னை புத்தக காட்சி புன்னகை அரங்கு
நந்தனம்
நேரம் : மாலை 4 முதல் 6 வரை
****