குறும்பட விழா

நவம்பர் 5ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் உள்ளே அமைந்துள்ள ப்ரிவீயூ திரையரங்கினுள் நண்பர் அருண்பிரசாத் இயக்கி நான் கதைவசனம் எழுதியுள்ள ஐந்து குறும்படங்களின் திரையீட்டு விழாவும் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது

நெய்வேலிபுத்தகக் கண்காட்சியும் தினமணியும் இணைந்து நடத்திய குறும்படப்போட்டியின் சிறந்த படம், சிறந்த எடிட்டிங். டான் குறும்படப்போட்டியில் சிறந்த படம். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்வின் சிறந்த குறும்படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பல முக்கிய விருதுளைப் பெற்றுள்ளன இந்தக் குறும்படங்கள்.

இன்று மாற்றுசினிமா வெளியை உருவாக்குவதற்கு குறும்படங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன, அந்த வகையில் அருண்பிரசாத்தின் இந்தக் குறும்படங்கள் தனக்கான தனித்துவத்துடனிருக்கின்றன.

அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

இடம் ஏவிஎம் ஸ்டுடியோ ப்ரிவீயூ திரையரங்கு

நாள் 05.11.2011

நேரம் 6.30 pm

••

0Shares
0