குற்றமுகங்கள்

காலனிய காலத்தின் குற்றங்களை முன்வைத்து நான் எழுதிய புனைவுகளின் தொகுப்பு குற்றமுகங்கள். இந்த நூல் குறித்து கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் சிறப்பான மதிப்பீட்டை எழுதியுள்ளார். அகல் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி

•••

எஸ். ராமகிருஷ்ணனின் குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அதே காலப்பகுதியில், இந்தியாவை ஆள்வதற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியார், இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் மீதும் குற்றவாளிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமே ஒரு முறையான நிர்வாகத்தை நிலைநாட்ட இயலுமென்று நம்பினர். திருடர்களும் கொலைகாரர்களும் கதைப்பாடல் நாயகர்களாக வாய்மொழிக் கதைகளாக நிலைபெற்று வழிபாட்டு அந்தஸ்தைப் பெறுவதையும் தடுத்து உரிய அமைப்புகளை நிறுவ வேண்டிய கட்டாயம் வெள்ளையர்களுக்கு இருந்ததாக ஆய்வாளர் சஞ்சய் சுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.

குற்றமுகங்களின் முதல் சில கதைகளில் வரும் திருடர்கள் நிலத்துக்கும் நீருக்குமிடையே சஞ்சரிப்பவர்கள். தங்கப்பல் மோனியும், லான்சர் கீச்சானும் நீரின் தன்மைபெற்ற திருடர்கள். நூபுரனோ ஓடும் ரயிலில் பிறந்தவன். திருவிழாக்களிலும் நீர்ப்பகுதிகளுக்கு அருகிலும் பிறழ்காமத்துக்கான விழைவு கூடுதலாக ஏற்படுவதாக காமசூத்ராவில் வாத்சாயனர் குறிப்பிடுவதைச் சேர்த்துப் பார்க்கிறேன். கோளாம்பி திருவிழா ஒன்றில்தான் குற்றவாளியாக பரிமாற்றம் அடைகிறான். பின்னர் பைத்தியமாகவும் ஆகி கடைசியாக கங்கைக் கரையில் திரிகிறான்.

குற்றமுகங்களில் வரும் 25 கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் குற்றவாளிகளின் அகத்தைத் திறக்கும் வசீகரமான சாவிகளாக மாற்றியிருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணன் தான் படைத்த ஒவ்வொரு குற்றவாளியையும் அமர நட்சத்திரங்களாக மாற்றியுள்ளார். தமிழில் நான் சமீபத்தில் வாசித்த புனைவுகளில் மிகவும் முக்கியமான நூல் இது.

கவிதை, மெய்ஞானம், காதல், அற்புதங்கள்  எஸ். ராமகிருஷ்ணனின் ‘குற்றமுகங்கள்’ நூலை முன்வைத்து

ஷங்கர்ராமசுப்ரமணியன்

அகல் இணைய இதழில் முழுக்கட்டுரையினையும் வாசிக்கலாம்

நன்றி

அகல் இணைய இதழ்

தேசாந்திரி பதிப்பகம் சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண் 472 மற்றும் 473

அங்கே இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம்

0Shares
0