இரண்டு ஜேகேயின் புகைப்படங்களை காலையில் பார்த்தேன். இணையத்தில் கிடைத்த புகைப்படங்கள்.
தாஜ்மகாலின் முன்பாக நிற்கும் ஜெயகாந்தனின் இந்தப் புகைப்படம் மிகவும் வசீகரமாகவுள்ளது.
அவரது உடையும் தோரணையும் பாருங்கள். எழுத்தாளனுக்குத் தமிழ் சமூகத்தில் கௌரவத்தை உருவாக்கித் தந்தவர் ஜேகே.
கண்ணதாசனுடன் ஜேகே உள்ள புகைப்படத்தில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி கையில் சிகரெட் முகத்தில் புன்சிரிப்புமாக ஜேகே அமர்ந்திருக்கும் விதம் அவரது ஆளுமையின் வெளிப்பாடு.
காலையில் பெய்து கொண்டிருக்கும் மழையின் ஊடே ஜேகேயைப் பற்றிய நினைவுகள் ததும்புகின்றன.

