இணையதளத்தில் தமிழ்படைப்புகள் அதிகம் வாசிக்க கிடைப்பதில்லை என்ற குறையைப் போக்கிட புதியதொரு இணையதளம் உருவாகியிருக்கிறது
ஒபன் ரீடிங் ரூம் என்ற இந்த இணையதளத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்களில் இருந்து லா.ச.ராவின் இதழ்கள் வரை நிறைய படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன
இவற்றை இணையதளத்திற்கு சென்று நேரடியாக வாசிக்கலாம், அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ் இலக்கிய வாசிப்பினை மேம்படுத்துவதற்கு இது ஒரு அரிய சேவை
இதனைச் சாத்தியமாக்கியுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ரமேஷ் சக்ரபாணிக்கும் அவரது தோழமை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சுட்டி
https://www.openreadingroom.com/?cat=92
**