நண்பர் பவா. செல்லதுரை தான் படித்த சிறந்த சிறுகதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கதை சொல்லும் நிகழ்ச்சி ஒன்றினை திருவண்ணாமலையில் தொடர்ச்சியாக நடத்திவருகிறார்.
நாளை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
குவா வாடீஸ், செங்கம் சாலை ,(சேஷாத்திரி ஆசிரமம் எதிரில் ) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்க.
வருகின்ற ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 9 ) அன்று மாலை திருவண்ணாமலையில் கே. வி. ஷைலஜாவின் படைப்புகள் ஒரு பார்வை என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஷைலஜா இந்த ஆண்டிற்கான கனடா இலக்கியத்தோட்ட மொழியாக்க விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
ஷைலஜா மொழிபெயர்ப்பு செய்துள்ள மலையாளச் சிறுகதை தொகுதியான யாருக்கும் வேண்டாத கண் ( சிஹாபுதின் பொய்த்தும்கடவு ) குறித்து நான் உரையாற்றுகிறேன்