திருவனந்தபுரத்தில்

பிப்ரவரி 1 மாலை யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியீடு திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மகாராணி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் நூலை வெளியிட்டார். ISRO முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் நூலைப் பெற்றுக் கொண்டார். எம். ஆர். தம்பான். ஸ்ரீஷா சேதுராமன், டாக்டர் விலாக்குடி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு நாவல் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்விற்குக் கவிஞர் சுகுமாரன், ஜி. ராஜேந்திரன் IAAS ஆகியோர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.
மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன் இல்லத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அவரது தந்தை சந்திரசேகரன் நாயர் தமிழிலிருந்து திருவாசகம் தேவாரம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக அரசின் ஜி. யு. போப் விருது பெற்றிருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியது சந்தோஷமாக இருந்தது.
பிப்ரவரி 2 காலை திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினேன்.
••
0Shares
0