தொடரும் சொற்பொழிவு

சென்னையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மையத்தில் நான் உரையாற்றும் உலக இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு நேற்றும் இன்றும் நல்ல கூட்டம், உட்கார இடமில்லாமல் நிறைய நண்பர்கள் நின்று கொண்டே உரையைக் கேட்டார்கள், இரண்டு நாட்களும் இரண்டு மணிநேரம் உரையாற்றியிருக்கிறேன்

உலக இலக்கியத்தை அறிந்து கொள்வதில் இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுவது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது, அதிலும் குறிப்பாக நிறைய இளைஞர்கள் வந்து கேட்பது சந்தோஷம் தருவதாக இருக்கிறது,.

தமிழில் நடைபெறும் முதல்முயற்சியிது, எனக்கே நிறைய தயக்கங்கள். எப்படி வரவேற்பு இருக்கும் என்ற சந்தேகங்கள் இருந்தன, அத்தனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது பார்வையாளர்கள் காட்டிய ஆர்வம்,

மிகுந்த ஆர்வத்துடன், அமைதியாக, ஆழ்ந்து உரை கேட்கிறார்கள்.

நாளை நான் ஜென் கவிதைகள் குறித்துப் பேச இருக்கிறேன், அனைவரும் வாருங்கள்

**

0Shares
0