நன்றி நண்பர்களே

நேற்று (13.04.2017 ) எனது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்திய நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பையில் இருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த சத்யமூர்த்தி அவர்களுக்கும், லண்டனிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த காயத்ரிக்கும், செங்கல்பட்டிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து கொண்டுவந்து நேரில் தந்து மகிழ்வித்த டி.லட்சுமணனுக்கும், அழகான டிஜிட்டில் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்த தீபாவிற்கும், தனது அலுவலகத்தில் எனது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்த இயக்குனர் சங்கர்தயாள் மற்றும் நண்பர்களுக்கும், எனது பிறந்தநாளுக்காக அன்னதானம் அளித்த புதுக்கோட்டை தமிழ்வரதனுக்கும், டிஸ்கவரி புக் பேலஸில் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்த வேடியப்பனுக்கும், என்னை வாழ்த்திய எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் தேவதச்சன், தோழர் எஸ்.ஏ. பெருமாள். எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ,கவிஞர் சுகுமாரன், இயக்குனர் பார்த்திபன், இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் சற்குணம், இயக்குனர் வெங்கட் பாக்கர், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் பவா.செல்லதுரை, மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, கவிஞர் சமயவேல், கவிஞர் அனார், எழுத்தாளர் சரணவன் சந்திரன். எழுத்தாளர் பாலபாரதி, ஒவியர் சீனிவாசன், எழுத்தாளர் அஜயன்பாலா, கவிஞர் வெயில், எழுத்தாளர் தமிழ்மகன், ஸ்ருதி டிவி கபிலன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் பாமரன், கவிஞர் பிருந்தாசாரதி, ஆடிட்டர் சந்திரசேகரன், ஆர்.பிரபு, கோ.மா.கோ.இளங்கோ, டி.எஸ்.பி.ராஜன், காசி, மணிகண்டன், ஐஐடி சசிக்குமார், திருப்பூர் ஈஸ்வரன், தங்கப்பன், அந்திமழை அசோகன், ஹர்ஷி, பாலா, அழகியமணவாளன், கே.பி.விநோத், பாலாஜி வெங்கட்ராமன், டாக்டர் ரவி, அய்யாலு குமரன், ராஜா திருவேங்கடம், பொன்சுதா, கே.என்.சிவராமன், விக்னேஷ் பவித்ரன், மு.முருகேஷ், மணிமாறன், சாம் டேனியல், தர்மபுரி சுமதி, மதுரை அசோக், மாரிமுத்து, ஆரணி சுதாகர், சுபாஷிணி, எஸ்.ஆர்.வி. பள்ளி ஆசிரியர்கள், கவிஞர் தமிழ்நதி, கவிஞர் உதயசங்கர், எழுத்தாளர் கிறிஸ்தோபர் ஆன்டனி, கவிஞர் ஷாஜகான், எழுத்தாளர் பாரதிமணி, நாடக இயக்குனர் பிரசன்னா ராமசாமி, பாலசுப்ரமணியன் சேலம், நியூஸ்செவன் ராதாகிருஷ்ணன், நோபல் செல்லதுரை, கவிஞர் பொன்வாசுதேவன், விகடன் தடம், ஹலோ எப்.எம் மற்றும் ஊடக நண்பர்களுக்கும், வாழ்த்துகளை மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தெரிவித்த அயலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கும், பல்வேறு பரிசுகளை அளித்த நண்பர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றிகள்.

என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நெகிழச் செய்கிறது. இந்த உற்சாகமும் அன்பும் உத்வேகத்தைத் தரக்கூடியது. நன்றி நண்பர்களே. பள்ளி நாட்களில் பிறந்தநாள் கொண்டாடும் போது ஏற்பட்ட சந்தோஷத்தை நேற்று மீண்டும் அடைந்தேன். நாள் முழுவதும் கொண்டாட்டம், நண்பர்கள் வருகை. விருந்து என இரவு வீடு திரும்பும் போது மணி பனிரெண்டைக் கடந்துவிட்டது.

வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என உணரச்செய்த உங்கள் அனைவருக்கும் தீராத நன்றிகள்.

••

0Shares
0