நன்றி

எனக்கு இயல் விருது கிடைத்துள்ளதற்காக உயிர்மை நடத்திய பாராட்டுவிழா காமராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து , பேராசிரியர் ஞானசம்பந்தம், இறையன்பு ஐஏஎஸ், விஜயசங்கர்(எடிட்டர் பிரண்ட்லைன்) செம்மலர் ஆசிரியர் எஸ்ஏபெருமாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்

சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்வின் தலையான விஷயமாக இருந்தது, எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் மீதான அவரது ஈடுபாடும் அக்கறையும் முன்னோடியான செயல்பாடு என்றே சொல்வேன்

வைரமுத்து அவர்கள் எனது புத்தனாவது சுலபம் சிறுகதைத் தொகுப்பு குறித்து மிக விரிவாக அதன் நுண்மைகளைப் பாராட்டி உரையாற்றினார், எனது ஆசான் எஸ்ஏபெருமாள் அவர்கள் எனது இலக்கியப்பணிகளை பாராட்டி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் இறையன்பு ஐஏஎஸ், விஜயசங்கர் பேச்சில் என் எழுத்தின் மீதான அவர்களின் ஈடுபாடும் அன்பும் முழுமையாக வெளிப்பட்டது

இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த நிவேதனம் உணவகம், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் எஸ்கேபி பொறியியல் கல்லூரி கருணா ஆகியோருக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பத்திரிக்கையாளர் தொடர்பினை ஒருங்கிணைப்பு செய்த நிகில் முருகன் அவர்களுக்கும், நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவிய நண்பர்கள் மாரிமுத்து, ஜெயசிம்மா,  அருண்பிரசாத்,  அழகிய மணவாளன், , குறிஞ்சி பிரபா, அனந்த நாராயணன், பவா.செல்லதுரை, குறிஞ்சில், விவேகானந்தன், ஜோதி, தாமஸ், ராஜபாளையம் ஆனந்தி, ஆடிட்டர் சந்திரசேகரன், உயிர்மையின் சார்பில் இதனைச் சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும், செல்வி, வசந்தி, தனசேகர், மற்றும் உயிர்மை பதிப்பக ஊழியர்களுக்கும், புகைப்படம் எடுப்பதில் உதவிய பிரபு மற்றும் பயஸ், சுரேஷ் ஆகியோருக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணைய எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும், மனம் ததும்பும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது பரபரப்பான பணிகளுக்கு ஊடாக டெல்லியிருந்து விமானத்தில் வந்து தனது அன்பைப் பகிர்ந்து கொண்ட பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும், இந்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே வந்திருந்த திருப்பூர் சேர்தளம்  வெயிலான் மற்றும் நண்பர்களுக்கும், சாத்தூரில் இருந்து வந்திருந்த அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், டாக்டர் தனபால், எழுத்தாளர் ஷாஜகான் உள்ளிட்ட நண்பர்களுக்கும், மதுரை, கோவை, தஞ்சை, கும்பகோணம், ஈரோடு, என பல ஊர்களில் இருந்தும் நிகழ்விற்காக வந்து போன இலக்கிய நண்பர்களுக்கும் நிறைந்த நன்றி

விருது எப்போதுமே எனது பொறுப்புணர்ச்சியை அதிகப்படுத்துகிறது, இன்னும் கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும், மொழிக்கும் இலக்கியத்திற்கும் சமூகவாழ்வின் மேம்பாட்டிற்கும் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கடந்த பலமாதங்களாகவே எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன், 2012ன் டிசம்பரில் எனது புதிய நாவல் வெளியாக உள்ளது,

••

இயல் விருது பற்றிய நிகழ்வின் இணைப்புகள்

https://600024.com/gallery/events/rajini-s-ramakrishnan-felicitation/

https://www.indiaglitz.com/channels/tamil/videos/32193.html

https://www.envazhi.com/rajini-felicitate-s-ramakrishnan/

https://ibnlive.in.com/news/not-schooling-reading-refined-me-more-rajini/226659-62-130.html

https://www.supergoodmovies.com/38630/kollywood/rajini-at-s-ramakrishnan-s-iyal-award-function-news-details

https://www.mysixer.com/?p=16076

https://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/writers-thank-rajinikanth-619

https://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-12-01/rajinikanth-tamil-literary-function-03-02-12.html

https://www.indiaglitz.com/channels/tamil/videos/32207.html

https://chennaionline.com/video/city-feature/Rajinikanth-Speech-in-S-Ramakrishnan-Felicitated-Event—Part-I/3385.col

https://kalakkalcinema.com/tamil_events_list.php?id=3290

https://www.cineshadow.com/?p=21375

https://pluzmedia.in/galleries/kollywood/27974/rajinikanth-at-iyal-award-for-sramakrishnan-felicitated-event-pictures

https://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/Rajini_Ramakrishnan_Felicitation_Function.html

https://kollywoodz.com/rajini-at-s-ramakrishnan-felicitated-event-photo-stills/

***

0Shares
0